பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதனையும் சாதனையும் கூட்டத்தில் எதிலும் சேரவில்லை. எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை. அன்பினாலே அழுது, மெய்யன்பினாலே அழுது தொழுது, சோதித்த மெய்யன்பினாலே அழுது தொழுது உருகி உய்வு பெறுவதற்கு ஏற்பட்ட புத்தி, சாதித்த புத்தி, வந்து எனக்கு வாய்த்திருக்கிறதே. இது எப்படி வந்து வாய்த்தது என்று தெரிய வில்லையே! அது ஆண்டவன் அருள்தான்: சாதித்த புத்திவந்து எங்கே எனக்கு இங்ங்ன் சந்தித்ததே! என்று மிகவும் வியப்பெய்திப் பேசுகிறார் அருணகிரியார். இப்படிப் பேசுவது பெரியவர்கள் வழக்கம். அபிராம பட்டர் இப்படிப் பேசுகிறார். பராசக்தியைப் பார்த்துக் கூறுகிறார். நான் என்ன அம்மா புண்ணியம் செய்திருக்கிறேன்? எனக்கே தெரியவில்லையே!” "நான்முன் செய்த புண்ணியம் ஏதென் அம்மே?” என்று வியப்பெய்திக் கேட்கிறார். இந்தப் பிறவியில் நான் உன் புகழை நினைந்து, உன் நாமங்களைக் கற்று, உன்னுடைய பாத அம்புயத்தில் பக்தி பண்ணி வாழ்ந்து, உன்னை விரும்பித் தொழு கிற அடியவர்களின் கூட்டத்தையே இரவு பகலாக விரும்பி வாழ்வது என்றால் முன்சென்மப் புண்ணியம் இல்லாமல் உண்டாகுமா? அத்தகைய பேறு எனக்குக் கிடைத்திருக்கிறதே!' 'கண்ணியது உன்புகழ் கற்பதுஉன் நாமம்; கசிந்துபத்தி பண்ணியது உன்இரு பாதாம் புயத்தில், பகல்இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான்முன்செய்த புண்ணியம் ஏதென் அம்மே புவி ஏழையும் பூத்தவளே?” 'ஏழு உலகத்தையும் உண்டாக்கியவளே! நான் செய்த புண்ணியம் என்ன? எனக்கே தெரியவில்லையே! என்று அதிசயப் பெருக்கிலே கேட்கிறார். 'அம்மாவும், அப்பாவுமாக ஒன்று சேர்ந்த திருவுருவம் உடைய பெருமானுக்கே, "என்னை நீ இப்படிப் பாவிக்க வேண்டும்' என்ற தன் பாவனையைப் போதித்த பெருமானை, ஞானசக்தியை வேலாக உடைய பெருமானை, நான் அவன் இருக்கிற இடத்திற்குச் சென்று, உள்ளத்தால் அவன் அன்பை 323