பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மேற்கொண்டு போற்றினேன்; பின்பு நான் உய்யும்படியாகச் சோதித்த மெய்யன்பு உண்டாயிற்று. அது பொய்யன்பு அன்று. காரணம் அந்தப் பெருமானிடத்திலே சென்றேன்; அழுதேன்; அழுது தொழுதேன்; அழுதுதொழுது உருகினேன். அழுது தொழுது உருகிச் சாதித்த புத்தி எனக்கு வந்திருக்கிறதே, அதனால் அன்பு பொய் அன்று. ஆனால் அந்தப் புத்தி எப்படி வந்தது என்று எனக்கே தெரியவில்லையே! பெரிய ஆச்சரியமாக அல்லவா இருக் கிறது? எல்லாம் அவன் திருவருள்தான் என்று வியப்பெய்திப் பேசுகிறார் அருணகிரியார். பாதித் திருஉருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப் போதித்த நாதனைப் போர்வே லனைச் சென்று போற்றிஉய்யச் சோதித்த மெய்யன்பு பொய்யோ? அழுது தொழுதுஉருகிச் சாதித்த புத்திவந் தெங்கே எனக்கிங்ங்ன் சந்தித்ததே! (தம்முடைய பாதித் திருவுருவம் அம்பிகையை உடைமையால் பச் சென்று பசுமை நிறம்பெற்ற சிவபிரானுக்குத் தன்னைப் பாவிக்கும் முறையை உபதேசித்த நாயகனை, போரில் வீரச் செயல் புரியும் வேலாயுதக்கடவுளை, சென்று வாழ்த்தி உய்தியடைவதற்காகச் சோதனை செய்துகொண்ட உண்மையான அன்பு பொய்யாகுமா? ஆகாது. அவ் வன்புக்குக் காரணமாக, அழுது அவனைத் தொழுது உருகி இந்த அன்பைச் சாதித்துக் கொண்ட நல்லறிவு எனக்கு இவ்வாறு எப்படி வந்து கூடியது? இது வியப்பாக இருக்கிறதே! என் முயற்சி இன்றியே திருவருள் இத்தகைய புத்தியை எனக்கு கிடைக்கச் செய்தது என்பது குறிப்பு. பச்சென்றல் - பசுமையாக இருத்தல், தன் பாவனை - தன்னைப் பாவிக்கும் திறம். சாதித்த - நினைத்ததை நிறைவேற்றிய. எங்கே - எவ்வாறு.) 324