பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மரணம் இல்லா வாழ்வு மரணம் இல்லாமல் வாழ்கிற வாழ்வு இன்னது என்பதை முன்பு ஒருமுறை விரிவாகச் சொல்லியிருக்கிறோம். ஞானிகளும் அஞ்ஞானிகளும் உடம்பை விட்டு இறந்து போகிறார்கள். ஆனால் இருவருடைய இறப்பும் ஒரே தன்மை உடையன அல்ல. ஞானிகள் பெறுவது என்றைக்கும் மாறாத விடுதலை. அஞ் ஞானிகள் பெறுவது சிறை மாற்றம் போன்றது. எப்போதுமே இந்த உடம்போடு இருக்கலாம் என்ற நிலை யாருக்கும் கிடைக் காது. பஞ்சபூதத்தின் தொடர்புடைய உடம்பு என்றைக்கேனும் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். ஆஞ்சநேயர் - ஆஞ்சநேயர் முதலிய பலர் சிரஞ்சீவியாக இருக்கிறார்கள் என்று சொல்வது உண்டு. எங்கெங்கே ராமனுடைய புகழ்பாடும் பஜனை நடைபெறுகிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் வந்து கேட்டுக் கொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கையும் உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் எந்த உடம் போடு இருந்தாரோ அதே உடம்போடு சிரஞ்சீவியாக இருக்கிறார் என்பது உண்மையானால் ராமாயணம் நடக்கும் இடத்தில் நாம் காணும் உருவத்தோடு அவர் வர வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒன்று அவர் சிரஞ்சீவியாக இருப்பது பொய்யாக இருக்கவேண்டும்; அல்லது அவர் ராமாயணம் படிக்கும் இடத்தில் வருகிறார் என்பது பொய்யாக இருக்க வேண்டும். இரண்டும் பொய் இல்லாமல் இருப்பதற்கு மிகவும் நுட்பமான ஒரு கருத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். சிரஞ்சீவித் தன்மை என்பது இந்தப் பெளதிக உடம்போடு இருத்தல் என்று கொள்ளக் கூடாது. ஆஞ்சநேயர் என்ற தத்துவம் எப்போதும் பசுமையாக, சிரஞ்சீவியாக இருக் கிறது. ராமாயணம் வாசிக்கும் இடங்களில் எல்லாம் மிகப் பணிவுடன் ராமாயணத்தைக் கேட்கிற தத்துவம் ஒன்று உலவு கிறது. அது எல்லாக் காலத்தும் உலவும் என்பதே அந்தச் சிரஞ்சீவித் தன்மைக்குப் பொருள். சிரஞ்சீவித் தத்துவம் பரம்பொருளாகிய இறைவன் என்பது சத்தியமான நித்திய தத்துவம். அந்த இறைவனும் ஒருகாலத்தில் ஓர் உருவம் கொண்டு 323