பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனை வெல்லுதல் வருகிறான். எல்லாக் காலத்தும் அந்த உருவத்தையே எடுத்துக் கொண்டு வரவேண்டுமென்பது இல்லை. யார் யார் எந்த உருவத்தை விரும்புகிறார்களோ அந்த உருவத்தில் வந்து அருள் செய்வான் என்பதுதான் நித்தியமான சிரஞ்சீவித் தத்துவம். இதற்கு நம் முடைய நூல்களில் எத்தனையோ உதாரணங்கள் உண்டு. கங்கையில் ஒடுகிற தண்ணீர் எப்போதும் ஒடிக் கொண் டிருக்கிறது. ஆனால் அதை எடுத்து வைக்கிற பாத்திரம் மாத்திரம் இடம் பொருள் ஏவல் முதலியவற்றினால் வெவ்வேறாக இருக் கிறது. உருவம் வெவ்வேறாக இருந்தாலும் உள்ளே இருக்கிற தண்ணீர் ஒன்றுதான். அதுபோலவே இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கு அன்பர்கள் பல பல துறைகளில் பல பல உருவத் தோடு அவனை வழிபடுகிறார்கள். அவன் நித்திய தத்துவமாத லால் அவனைப் பாவிக்கின்ற உருவமும் என்றைக்கும் நித்திய மானது என்று கொள்ளக் கூடாது. சிரஞ்சீவித் தன்மை அந்தத் தத்துவத்திற்கேயன்றி உருவத்திற்கு அன்று. வேடன் கதை ஒரு காட்டில் ஒரு வேடன் இருந்தான். அவன் பல விலங்கு களைக் கொன்று திரிந்து வாழ்ந்து வந்தான். அப்போது ஒரு பெரியவர் அந்தக் காட்டின் வழியாகச் சென்றார். அவனைப் பார்த்து அவனிடத்தில் கருணை பூண்டு, "அப்பா நீ என்ன செய் கிறாய்?' என்று கேட்டார். "நான் தினந்தோறும் வேட்டையாடிப் பிழைக்கிறேன்" என்று அவன் சொன்னான். "எப்போதுமே கொலை பண்ணிப் பல விலங்குகளைத் துன் புறுத்தி வாழ்கிற வாழ்க்கை ஒரு வாழ்வா? நீ எப்படி முன்னேறப் போகிறாய்?' என்று இரக்கத்துடன் கேட்டார் அவர். 'எனக்குத்தான் தினந்தோறும் வேண்டிய உணவு கிடைக் கிறதே. காடு நிறைய விலங்கினங்கள் இருக்கும்போது எனக்கு என்ன குறைவு?" 'உன்னைப் போலவே புலி முதலிய விலங்குகள் எண்ணி யிருக்கின்றன. காடு நிறைய மான் முதலிய விலங்கினங்கள் இருக் கும்போது நமக்கு என்ன குறைவு என்று அவை நினைக்கலாம். 329