பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனை வெல்லுதல் என்பதைத் தெரிந்து கொண்டேன். அதை நினைக்கும்போது பயமாகத்தான் இருக்கிறது' என்றான். பெரியவர், "நீ பயப்படவேண்டாம். அந்தப் பயத்தைப் போக்கு வதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்தக் காட்டின் ஒரு மூலையில் ஒரு முனிவர் இருக்கிறார். அவரிடம் போய் உபதேசம் வாங்கிக் கொள். அந்தப் பயத்தை நீக்குவதற்கு வழி கிடைக்கும்" என்றார். "அவரை எனக்குப் பழக்கம் இல்லையே! உபதேசம் என்றால் என்ன? அவரை எப்படி அணுகுவது?" என்று கேட்டான் வேடன். "அவர் இப்படியே வெளியில் வருவார். அப்போது அவர் காலில் விழுந்து எழுந்து நில் உபதேசம் செய்ய வேண்டுமென்று கேள். அவர் எதைச் சொல்கிறாரோ அதையே நீ மந்திரமாக வைத்து எப்போதும் சொல்லிக் கொண்டிரு. பயம் போகிற வழி கிட்டும்." இப்படிச் சொல்லி அவர் போய்விட்டார். மறுநாள் அந்த வேடன் அந்தக் காட்டின் மூலையில் உள்ள முனியுங்கவரைத் தேடிக்கொண்டு போனான். அங்கேயுள்ள பர்னசாலையில் முனிவர் இருந்தார். உள்ளே போய் அவரைப் பார்ப்பதற்கு அவனுக்குத் தைரியம் இல்லை. யமனுடைய பயத்தைப் போக்கு கின்ற உபதேசம் செய்கிறவர் மிகப் பெரியவர் ஆதலினால் அவரை எளிதில் அணுக முடியாது என்று அஞ்சி நின்றான். ஒருநாள் அந்த முனியுங்கவர் அந்தக் காட்டில் காலைக்கடன் முடிப்பதற்கு மரங்கள் அடர்ந்த இடத்தில் போய் உட்கார்ந்தார். வேடன் அந்தச் சமயத்தில் அவரைப் பார்த்தான். அவருக்கும் அவனுக்கும் இடையில் மரம் இருந்தது. அவன் கிழே விழுந்து குரு குரு என்றான். அவன் குரு குரு என்றது குர் குர் என்பது போலக் கேட்டதனால் அவர், 'பன்றி, பன்றி' என்று கத்தினார். அந்தப் பன்றி என்ற வார்த்தையையே உபதேசமாகக் கொண்டு வேடன் அங்கேயிருந்து வீட்டுக்கு வந்து பன்றி பன்றி என்று சொல்லிக் கொண்டு அமர்ந்துவிட்டான். உண்மையாக உயிர் போய் விடும் என்ற பயத்தில் அதற்குப் பரிகாரம் தேட முயன்றவன் ஆதலால், மற்றவற்றை மறந்து பன்றி பன்றி என்று சொல்லிக் கொண்டே உட்கார்ந்தான். நாளாக ஆக பெரிய யோகியாகி விட்டான். அவனுடைய தீவிரமான பக்தியைக் கண்டு திருமால் 333.