பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 கொண்டேன். காலனுடைய பயம் இல்லை யென்ற பொருளைத் கொண்ட திருப்புகழாகப் பொறுக்கி அப்படியே ஓதி வந்தேன். கந்தர் அலங்காரப் பாடல்களையும் சொன்னேன். என்னுடைய தாய் அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள். நோயினால் ஏற்பட்ட துன்பம் வரவரக் குறைந்து போயிற்று. முகத்திலும் நல்ல தெளிவு ஏற்பட்டது. ஈளை நோயினால் உண்டாகிற துன்பமும் மறைந்தது. ஆனால் நாடி தளர்ந்தே வந்தது. முருகனுடைய திருவருளால் ஒரு மாத காலம் திருப் புகழையும், அருணகிரி நாதப் பெருமானுடைய மற்ற வாக்கு களையும் தெளிவாகக் கேட்கின்ற நிலையில் இருந்தாள். ஆனால் மருத்துவர்கள் நாடி தளர்ந்து கொண்டே வருகிறதென்பதை நினைப்பூட்டிக் கொண்டிருந்தார்கள். இறந்து போய்விடுவாள் என்ற நினைப்பினால், முறையாகச் செய்கின்ற பிராயச் சித்தத்தைப் பெரியவர்களை வைத்துக் கொண்டு செய்தேன். என் தாயே எழுந்து உட்கார்ந்து அந்தணர்களுக்குத் தட்சினை முதலியன கொடுத்தாள். ஒருநாள் இரவு நேரம். அப்போது என் தாய் படுத்துக் கொண் டிருக்கிற போது நினைவு தப்பினது போல இருந்தது. உடம்பு அப்படியே விறைத்துப் போய்விட்டது. மூச்சும் நின்றது. இது இறுதி அடையாளம் என்று எண்ணி அவள் உடம்பிலே திருநீறு பூசினேன். என்னுடன் கூடக் குடியிருந்த நல்ல பக்தராகிய முதிய வரிடம், 'என்ன செய்வது?’ என்று கேட்டேன். 'இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கங்கையை வாயில் விடுங்கள். இரவு நேரம்; என்ன செய்வது? இனி எல்லாம் விடிந்த பிறகே கவனிக்க வேண்டும்' என்று சொன்னார். கங்கையை எடுத்து வாயில் விட்டுக் கொண்டே முருகா முருகா என்று சொல்லிக் கதறினேன். திருநீற்றைப் பூசினேன். இரண்டு நிமிஷம் அப்படியே இருந்த அந்த உடம்பில் மீட்டும் உயிர் வந்துவிட்டது. மறுபடியும் கண்ணை விழித்துக் கொண்டாள். மேலும் ஒருவார காலம் நல்ல தெளிவோடு இருந்தாள். நான் பின்னும் ஊக்கத் தோடு திருப்புகழ்ப் பாக்களைப் பாராயணம் பண்ணிக் கொண் டிருந்தேன். அப்போது அந்தப் பெரியவர் என்னைப் பார்த்து வேடிக்கை யாக ஒன்று சொன்னார். "நீங்கள் திருப்புகழ் பாடிக் கொண்டிருக் 334