பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அப்படியே அவன் புகழைத் திருப்புகழ் என்று சொல்வது முறை. அருணகிரியார் முருகப் பெருமானின் புகழைத் திருப்புகழ் என்று பாடியிருக்கிறார். 'இறைவா, உன் திருப்புகழை நான் படிப்பேன். பலமுறை படித்து மனனம் பண்ணிக் கொள்வேன்' என்று சொல்கிறார். திருப்புகழ் என்றது இங்கே பொதுவகையில் முருகன் புகழ் என்று கொள்வதற்கு உரியது. - படிக்கும் திருப்புகழ் போற்றுவன். போற்றுதல் - பாதுகாத்துக் கொள்ளுதல். படிக்கிற உன் புகழைப் பாதுகாத்து வைத்துக் கொள்வேன்' என்பது பொருள். கையில் உள்ள அணி ஆடை முதலிய பொருள்களைப் பாதுகாப்பாக வைக்கும் இடம் பெட்டி. எம்பெருமானின் திருப்புகழைப் போற்றி வைக்கும் இடம் மனம். 'செவி வாயாக நெஞ்சுகளனாக' என்று இலக்கண நூலார் சொல்வார்கள். வாய் வழியாகச் சோற்றை உண்டு வயிற்றில் சேமித்துக் கொள்வது போலக் காது வழியாகக் கல்வியை உண்டு உள்ளத்தில் தேக்கிக் கொள்ள வேண்டுமென் பார்கள். உணவு சிறிது நேரம் ஆனவுடன் செரித்து விடுகிறது. மறுபடியும் உணவைத் தேடிக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் காதல் கேட்டு வாங்கிக் கொள்வதை உள்ளம் பல காலம் வைத்துக் கொள்ள முடியும். அதை மறந்துவிடுகிற மக்களும் இருக்கிறார்கள். பணத்தைப் போற்றுவதைவிடக் கல்வியைப் போற்றுவது சிறப்பு. பாடம் கேட்டால் போதாது. அதை மனனம் செய்து மீட்டும் சொல்லிச் சொல்லிப் பழகினால் உள்ளத்தடத்தில் பதிந்துவிடும். 'அப்படி உன் புகழைப் படித்து அதைப் போற்றுவேன்' என்கிறார் அருணகிரியார். முதலில் திருப்புகழைப் படிக்கவேண்டும். படித்துப் பழக்கம் செய்து கொள்ளவேண்டும். பலகாலம் படித்துப் பழகுவதோடு அதை மனத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும். பொருளைப் பற்றிக் கொள்வது போலப் பற்றிக் கொள்ள வேண்டும். அதனால், 'போற்றுவன்' என்று சொன்னார். நமக்கு வேண்டாதன. பல வற்றை மனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் பட்ட துன்பங்களை எல்லாம் நினைத்துக் கொண்டே இருக்கிறோம். அழகான ஆடை அணிகளை வைக்க வேண்டிய பெட்டியில் கூழாங்கல், கண்ணாடித் துண்டு முதலியவற்றைப் பொறுக்கிப் போட்டுக் கொண்டிருப்பவன் பைத்தியம். இறைவன் புகழை 24