பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனை வெல்லுதல் கிறீர்கள். காலன் இங்கே வரமாட்டான். அப்படி வருவதாக இருந் தாலும் நீங்கள் இங்கே இல்லாத நேரத்தில்தான் வருவான்' என்று சொன்னார். நான்கு நாள் கழித்து நான் வீட்டு வாசலுக்கு வந்தேன். அப்போதுதான் தினசரிப் பத்திரிகையைப் பையன் கொண்டு வந்து போட்டான். ஏதோ முக்கியமான செய்தி அதில் வந்திருந்தது. அந்த வீட்டில் குடியிருந்த நண்பரோடு அதுபற்றி வாசல் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது உள்ளே என் தாய்க்கு ஏதோ வேதனை உண்டானதாகத் தெரிந்தது. நான் வீட்டுக்குள் போனேன். அப்போது அன்னைக்குக் கண் நிலை குத்தியது. "நாத விந்துக லாதீ நமோநம' என்ற திருப்புகழைப் பாடி அருகில் இருந்த முருகன் படத்திற்குக் கர்ப்பூர தீபாராதனை காட்டினேன். அந்தப் பாட்டுச் சொல்லும் போது என் அருமை அன்னை தன் இரண்டு கைகளையும் குவித்துக் கொண்டாள். அதனோடு அவருடைய மூச்சு நின்று விட்டது. அப்போது அந்தப் பெரியவர் சொன்னார். "நான் சொன்னது போலவே ஆகிவிட்டது பார்த்தீர்களா? திருப்புகழை ஒதுகின்ற இடத்தில் காலன் வரமாட்டான். நீங்கள் அதை நிறுத்தி வெளியில் வந்தீர்கள். அந்தச் சமயம் பார்த்து அவன் வந்துவிட்டான். இது பெரிய ஆச்சரியம்' என்று சொன்னார். இந்த நிகழ்ச்சியை மற்றவர்கள் நம்பினாலும் நம்பா விட்டாலும், என் மனத்தில் இது உண்மையான நம்பிக்கையை உண்டாக்கிவிட்டது. அதற்கு முன்பு ஒருவகையில் உறுதி இருந் தது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு நிச்சயமாக இறைவனுடைய நினைவோடு அருணகிரியின் வாக்குகளை அதுசந்தானம் செய் தால் காலனால் வருகின்ற துன்பம் இல்லாமற் போய்விடும் என்ற நம்பிக்கை உண்டாயிற்று. பயத்தை மாற்ற வழி ஏதேனும் ஒரு பொருளால் பயம் உண்டானால் அந்தப் பொருளால் பயம் இல்லையென்று நினைப்பதைவிட அந்தப் பொருளுக்கு மாற்றாக ஒன்று நமக்குக் கிடைத்திருக்கிறதென்று 335