பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனை வெல்லுதல் 'நோதக்க செய்யும் சிறுபட்டி" - என்பது கலித்தொகைப் பாட்டு. யமனை யாரும் நிறுத்த முடியாது என்று சொல்வார்கள். 'மாற்றரும் கூற்றம்' என்று தொல் காப்பியம் கூறும். அவனுடைய கடாவையே யாராலும் நிறுத்த முடியாது என்றால் யமனைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? எருமை என்பது தாமதத்தின் அடையாளம். கருமையும் தாமதத்தின் நிறம். கருமையான தாமதத்தின் அடையாளமாகிய எருமை கரிய காலனுக்கு வாகனம். இருள் உலகத்திற்குச் செல்கின்ற உயிருடன் போகிறவன் காலன்; அதை அங்கே கொண்டுபோகும் வேலைக்காரன் காலன். அவனுக்கு வாகன மாக இருப்பது தாமதமும் கருமையும் நிறைந்த எருமை. யமன் எருமைக் கடாவின் மேல் வரும்போது அவனைக் கண்டு அஞ்சா மல் முருகப் பெருமானுடைய திருவருள் நமக்கு இருக்கிற தென்றும், அது உறுதுணையாக இருக்குமென்றும் எண்ணுகிற பேரன்பர்களில் அருணகிரிநாதர் தலை சிறந்தவர். "இந்த உலகம் எல்லாம் அறியும்படியாக உன்னை வெட்டித் தோல்வியுறச் செய்துதான் மறு காரியம் பார்ப்பேன்" என்று அவர் சீறுகிறார். பார் அறிய வெட்டுவது என்பது அருணகிரிநாதப் பெருமானுடைய மனத் திண்மையை உலகம் அறிவதற்காக அல்ல; 'முருகப் பெருமானின் அன்பன் ஒருவனிடம் யமன் வாலாட்டினான். அதனால் அவன் அழிந்து ஒழிந்தான். முருகப் பெருமானுடைய அருள் மிகச் சிறந்தது' என்று பார் அறிய வேண்டும். சூரசங்காரன் இப்படிக் கடாவில் வரும் யமனைப் பார்த்து அறை கூவுவதற்கு அவர் உள்ளத்தே துணிவைக் கொடுத்த பெருமான் எத்தகையவன்? அதனை விளக்கமாகச் சொல்கிறார். அந்தப் பெருமான் தேவர்களுக்கு யமனாக இருந்த சூரனைச் சங்காரம் செய்தவன். மூன்று உலகத்திற்கும் துன்பத்தைத் தந்து, தனக்குரிய வீரமகேந்திர புரியில் ஆயிரத்தெட்டுக் கோடி அண்டங்களுக்குத் தலைவனாக வீற்றிருந்த சூரனை முருகப் பெருமான் தானே வலியச் சென்று போர் புரிந்தான். முருகனுக்குச் சூரனால் எத்தகைய 337