பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 துன்பமும் இல்லை. ஆனாலும் முருகனை நம்பி வாழ்கின்ற அமரர்களுக்கும், முணிபுங்கவர்களுக்கும் சூரனால் துன்பம் உன் டாயிற்று. 'நமக்கு ஒன்றும் இல்லையே. மற்றவர்கள் எப்படிப் போனால் என்ன?" என்று எண்ணும் மனிதனைப் போன்றவன் அல்ல முருகன். அவனை யாராலும் அழிக்க முடியாது; அசைக்க வும் முடியாது. பிறரால் அவனுக்குத் துன்பம் இல்லை. அத்தகைய முருகன் அமரர்களை வாழ்விக்க வேண்டி, முனிபுங்கவர்களுக்குச் சிறப்பு அருளவேண்டி, அவர்களை எல்லாம் துன்புறுத்திய வெய்ய குணமுடைய சூரனோடு தானே வலியச் சென்று பொரு தான். அவனோடு முட்டிப் பொருதான். ஞானமே மயமாகிய செவ்வேலைத் திருக்கையில் ஏந்திக் கொண்டு சென்றான். 'அந்தச் செவ்வேல் பெருமானுடைய சந்நிதானத்தில் நான் நிற்கிறேன்" என்று அருணகிரிநாதர் சொல்கிறார். முருகன் திருமுன்பு அவன் சந்நிதானத்தில் நிற்கும்போது அங்கே யமனுக்கு வேலை இல்லை. ஒளி நிரம்பிய இடத்தில் இருளுக்கு வேலை இல்லை. பேரொளிக்கு முன்னால் இருள் அணு அளவும் நில்லாது. அருள் ஒளி இல்லாத இடத்தில் இருள் மயமான கடாவில் ஏறும் இருள் நிறக் காலன் வருவான். செவ்வேல் பெருமாளாகிய ஆறுமுகநாதனின் அருளொளி உலகத்தில் பட்டிக் கடாவில் வரும் அந்தகனுக்குப் புகும் வன்மை இல்லை. 'நான் செவ்வேற் பெருமாள் திருமுன்பு நின்றேன். அவன் ஆயிரம் யமனுக்குச் சமானமான சூரனை வலியச் சென்று பொருது அழித்தவன். ஆதலின் நீ இங்கே வர இயலாது. அப்படி உனக்கு என்னுடைய வன்மையைக் காணவேண்டுமென்றால் நீ விருது கட்டிப் புறப்படு. ஒரு கை பார்க்கிறேன். உலகம் எல்லாம் எம்பெருமானின் பெருமையை அறிந்து கொள்ளும்படி உன்னை வெட்டிப் புறம் கண்டு நிற்கிறேன்' என்று சொன்னார். சத்திவாள் 'அவன் கையில் பல ஆயுதங்களை வைத்திருக்கிறானே. உங்கள் கையில் என்ன ஆயுதம் இருக்கிறது?" என்று அருண கிரியாரைக் கேட்கலாம். அவர் விடை சொல்கிறார். 338