பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலனை வெல்லுதல் சத்தி வாள் என்றன் கையதுவே. சக்தியாகிய வாள் அவர் கையில் இருக்கிறதாம். இங்கே சக்தி என்றது வேல் அன்று. முருகப் பெருமானுடைய தாயாகிய சக்தி தந்த வேல் அது; அதற்குச் சக்தி என்றே பெயர். இங்கே இறை வனுடைய சக்தியாகிய வாள் என்று பொருள். இறைவனுடைய சக்தி அருளாகும். "அவன் எனக்குப் பாலித்த அருளாகிய சக்தி வாள் என் கையில் இருக்கிறது. இதைப் பார்க்க முடியாத அந்தகன் நீ உன்னுடைய படைகளுடன் போரிட வா. நான் உன்னைக் கண்டு அஞ்சமாட்டேன். செவ்வேல் பெருமாள் திருமுன்பு நின்றேன். நீ வந்தால் உலகம் அறியும்படியாக வெட்டிப் புறம் காணாமல் விடமாட்டேன்' என்று வீறு பேசுகின்றார் அருண கிரிநாதப் பெருமான். பயம் போக்கும் மந்திரம் நமக்கு அருணகிரிநாதப் பெருமானைப் போல இந்திரி யங்களை அடங்கி, முருகப் பெருமானுடைய தியானத்தை இடைவிடாமல் செய்து, அவர் பெற்ற உறுதியைப் பெறுவது என்பது எளிதில் முடியும் காரியம் அன்று. ஆனால் நம்முடைய உள்ளத்தில் உள்ள அச்சத்தைப் போக்க ஒரு மாற்று வேண்டும். யமனை அறைகூவுவதாக அமைந்துள்ள இந்தப் பாட்டை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தால் நம் மனத்தில் உறுதி உண்டாகும். மெஸ்மெரிஸம் என்னும் வித்தையில் தனக்கு ஏதேனும் ஒன்று அநுகூலமாக அமையும் என்று அடிக்கடி சொல்லிக் கொண் டிருந்தால் அந்த நிலை வந்துவிடும் என்று சொல்வார்கள். அது போல அருணகிரிநாதப் பெருமான் திருவாய் மலர்ந்த இந்தத் திருப்பாட்டை அடுத்தடுத்து விடாமல் சொல்வதால் கால னுடைய பயம் போய்விடும். இந்தப் பாட்டைச் சொல்வதால் மூன்று பயன்கள் உண்டா கின்றன. ஒன்று, நமக்கு மரணம் நிச்சயமாக வரும் என்ற உணர்ச்சி. இரண்டு, அதனைத் தருகின்ற காலனை நாம் வெல்ல வேண்டுமென்ற உறுதி. மூன்று அவ்வுறுதியைத் தருவதற்குச் செவ்வேற் பெருமான் திருமுன்னர் நிற்கிறோம் என்ற தைரியம். இந்த மூன்றும் வளர வேண்டுமானால் முருகப் பெருமானுடைய அன்பை உள்ளத்தில் வளரவிட்டுக் காலன்பால் உள்ள அச்சத்தைத் 339