பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ரூபாய் தொகுத்துவிடலாம் என்ற உறுதியான எண்ணத் தால் வாக்குக் கொடுக்கிறார். தம்முடைய நாணயத்திலே அவருக்கு அத்தனை நம்பிக்கை. நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்வது மிகவும் பேராற்றல் படைத்தவர்கள் வழக்கம். 'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்' என்பது குறள். இன்னவாறு நாம் மேற்கொண்ட செயல் முடியும் என்பதனை முன்னால் நிகழ்ந்த அநுபவங்களால் நன்கு உணர்ந்து, தம்முடைய ஆற்றலையும் தெரிந்து கொண்டவர்கள், இனி வருங்காலத்தில் வரும் நிகழ்ச்சிகளை வரையறை செய்து நடந்து கொள்கிறார்கள். அநேகமாக இப்போது காரியங்கள் செய்யப் புகும் மக்களால் அப்படி நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை; யாருடைய துணையையாவது எதிர்பார்த்தே செய்யவேண்டியிருக் கிறது. அதுவும் பெரிய அதிகாரிகளால் நடக்கக் கூடியவற்றை அவரைச் சார்ந்த சில்லறை அதிகாரிகளுடைய நட்பைப் பிடித்தே சாதித்துக் கொள்வது இப்போது வழக்கமாகிவிட்டது. பொறுப்பு பெரிய அதிகாரியைப் போய்ச் சந்திப்பதற்கு ஒருவருக்குத் தைரியம் இல்லை. ஆனால் அந்த அதிகாரிக்கு வேண்டிய வேறு ஒருவர் இவருக்குப் பழக்கம் உள்ளவராக இருப்பார். அவரிடம் போய் எப்படியாவது இந்தக் காரியத்தைச் சாதித்துக் கொடுக்க வேண்டுமென்று சொல்வார். அவரோ தமக்கு மேலதிகாரி மிகவும் வேண்டியவர் என்ற நம்பிக்கையினால், "நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? எப்படியாவது இந்தக் காரியத்தை நான் முடித்து வைக்கிறேன்' என்று உறுதி அளிப்பார். காரியம் சாதிக்க வேண்டிய பொறுப்பு இப்போது இடையில் நின்ற அவரைச் சார்ந்து விடுகிறது. வேண்டிக் கொண்டவர், 'என்ன, ஏதாவது செய்தீர்களா?" என்று அடிக்கடி கேட்பார். நடுவில் நின்றவரோ தாம் வாக்குக் கொடுத்துவிட்டமையினால் தமக்கு மேலதிகாரியாகிய அந்த அன்பரிடம் சென்று நயமாகப் பேசுவார். 'உங்கள் தைரியத்தில் 342