பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள் நான் இதை நிறைவேற்றித் தருவதாக வாக்குத் கொடுத்துவிட்டேன். அந்த மனிதன் பொழுது விடிந்தால் பொழுது போனால் என் வாசலில் வந்து நிற்கிறான். என்னாலே அந்தக் காரியம் ஆகக் கூடியது அன்று; உங்களை நம்பித்தான் நான் அந்த வாக்கை அளித்தேன். என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்று கேட்டுக் கொள்வார். அந்த வகையில் நிச்சயமாக இறைவன் திருவருள் கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டின்மேல் அருணகிரியார் பட்டிக் கடாவில் வரும் அந்தகனைப் பார்த்து, 'உனைப் பாரறிய வெட்டிப் புறங்கண்டு அலாது விடேன்' என்று சென்ற பாட்டில் அறைகூவினார். இந்தப் பாட்டில் இறை வனைப் பார்த்து, "ஆண்டவனே! நான் இப்படி அவனிடம் சொல்லி விட்டேன். அந்தப் பாவி வந்தால் நீதான் காப்பாற்ற வேண்டும்' என்று விண்ணப்பித்துக் கொள்வது போலச் சொல்கிறார். வேண்டியது வழங்குதல் ஆண்டவன் தன்னுடைய பக்தர்களுக்காக எந்தக் காரியத்தை யும் செய்வான். 'முன்னாலேயே நீ ஏன் சொல்லவில்லை? மரி யாதையாக நீ ஏன் கேட்கவில்லை? சம்பிரதாயங்களை எல்லாம் தெரிந்து கொள்ளவில்லையே!' என்றெல்லாம் கேட்கிறவன் அல்லன் அவன். மற்ற உருவத்தில் அவன் இருந்தால் ஒருகால் மட்டுமரியாதை பார்பபது கூடும். ஆனால் மிக்க எளிமையும், குழந்தை உருவமும், குழந்தைத் தன்மையும் உடைய முருகன் தன்னை நச்சி வந்தவர்கள் நினைப்பதை உடனுக்குடன் நிறை வேற்றித் தருவான். "வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு பெருமாளே” என்று அருணகிரியார் பாடுகிறார். நரசிங்க மூர்த்தி பிரகலாதனுடைய வரலாற்றில் அவனுக்காகத் திருமால் என்ன காரியம் செய்தார் என்பதைச் சற்று யோசிக்க வேண்டும். க.சொ.IV-23 343