பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அவனுடைய தந்தையாககிய இரணியன், 'உன்னுடைய கடவுள் எங்கே இருக்கிறான்? சொல்லடா என்று கேட்டான். அதற்குப் பிரகலாதன், "தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்; நீ சொன்ன சொல்லிலும் இருப்பான்” என்று சொல்லி விட்டான். அந்தக் குழந்தைக்கு நாராயணரிடம் அள விறந்த பக்தி; எப்படியாவது தனக்குத் துணையாக இருப்பார் என்ற உறுதி, அவன் நரசிங்க மூர்த்தியை முன்னாலே பார்த்தது இல்லை. அவர் எங்கும் இருப்பார் என்பதை உத்தேசமாகச் சொன்னான். அவன் அத்தகைய வார்த்தையைச் சொல்லிவிட்டான் என்பதற் காக அந்தப் பொறுப்பை மேற்கொண்டார் திருமால், 'நம் முடைய பக்தன் இப்படிச் சொல்லிவிட்டானே. நம்மை நம்பித் தானே சொன்னான்? அவன் வார்த்தையைக் காப்பாற்ற வேண்டி யது நம் பொறுப்பல்லவா? இந்த இரணியன் எந்த இடத்தில் நம்மை அழைப்பானோ? அங்கே தயாராக நிற்க வேண்டுமே!’ என்று மிகவும் பொறுப்புடன் நரசிங்கமூர்த்தி உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் இருந்து கொண்டிருந்தார். பக்தர்கள் எங்கே அழைத்தாலும் அங்கே வந்து சேவை சாதிக்கும் பெரு மாளாகிய அவர், இப்போது இரணியன் எங்கே அழைக்கிறானோ அங்கே வெளிப்படச் சித்தமாக இருந்தார். அதற்கு இரணியன் மேலுள்ள அன்பு காரணமன்று; பிரகலாதன் சொன்ன சொல்லை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு இருந்தார். இரணியன் எங்கே கூப்பிடுவானோ என்ற கவலை பிரகலாதனுக்கு இல்லை; நரசிங்க மூர்த்திக்குத்தான் இருந்தது. இரணியன் தினந்தோறும் தன் மார்பைத் தட்டிக் கொண்டு பேசுகிறவன், "நான் இருக்கும்போது வேறு தலைவன் யார்?" என்று கேட்பவன். அவன் இப்போதும் மார்பைத் தட்டிக் கேட்டிருந்தால் அவனுடைய மார்பிலிருந்தே நரசிங்க மூர்த்தி உதயமாகியிருப்பார். மார்பும், இருதயமும் ஒன்றுதானே? அவன் புண்ணியம் செய்தவனாக இருந்தால் தன் மார்பைத் தட்டிக் கொண்டிருப்பான். அப்போது அவன் இருதய கமலத்திலிருந்து நரசிங்கப் பெருமான் தோன்றியிருப்பார். அவனும் சிறந்த பக்தனாகியிருப்பான். அவனுக்கு நல்ல ஊழ் இல்லையே! 'நான் நான்' என்று சொல்லும்போது மாத்திரம் மார்பைத் தட்டிக் 344