பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள் அண்டங்களையெல்லாம் புதைத்துக் கொள்கிறதாம். முருகப் பெருமானின் பேரருளை வாய் விட்டுச் சொல்வது எளிது அன்று. அவனுடன் சார்ந்த பொருள்களின் பெருமையைக்கூட நம்மால் சொல்வது இயலாது. அவன் ஏறிவரும் வாகனமே இத்தனை சிறப்பு உடையது என்றால் அந்த வாகனத்தை உடைய பெரு மானின் பேரருளை அளவிட முடியுமா? ஆகையால் அந்தப் பெருமானின் பிரதாபத்தை வருணிக்காமல் அவன் ஏறும் மயூரத் தின் சிறப்பை இந்தப் பாட்டில் எடுத்துச் சொல்கிறார். கந்தர் அநுபூதியில் இந்த இரண்டு வாகனத்தையும் ஒரு பாட்டில் நினைப்பூட்டுகிறார். 'கார்மாமிசை காலன் வரின் கலபத்து ஏர்மாமிசை வந்து எதிரப் படுவாய்." முருகனுடைய வாகனமாகிய மயிலுக்கும், யமனுடைய வாகனமாகிய எருமைக்கும் எத்தனையோ வேறுபாடு உண்டு. எருமை தாமதத்தின் உருவம்; கரிய நிறம் பெற்றது; கண்ணுக்கு அவலட்சணமாக இருப்பது. இந்நாளில் கார் ஒட்டுகிறவர்களுக்கு எருமையைக் கண்டால் பயம். எத்தனைதான் ஊதுகுழலினால் ஊதினாலும் சாலையில் நிற்கும் எருமை மாடு நகருவது இல்லை; போகிற போக்குக்குத் தடையாக நின்று கொண்டிருக்கும். நம் முடைய வாழ்நாளில் போகிற போக்கில் யமனுக்கு வாகனமாக இருக்கிற எருமையும் நமக்குத் தடை செய்கிறது. ஆண்டவனுடைய மயில் வாகனமோ சத்துவ குணம் நிரம் பியது. அடியார்களை ஆண்டவன் காப்பாற்ற நினைக்கும் போது அவனுக்கு வாகனமாக நின்று நமக்கு அதுகூலம் செய்வது; பார்க்கப் பார்க்கக் கண்கொள்ளாப் பேரழகு உடையது; கண்ணைக் குளிர வைக்கும் பசுமை நிறத்தைப் பெற்றது. மயில் போகிற இடங்களில் சுறுசுறுப்பு இருக்கும். மயக்கத்தைத் தருகிற நஞ்சைப் பெற்ற பாம்பு மயிலைக் கண்டால் ஒடி ஒளியும். மனிதனுடைய மயக்கத்திற்குக் காரணமான மாயை என்னும் நஞ்சு பிரணவ சொரூபமாகிய மயிலின் தோற்றத்தைக் கண்டாலோ ஓடிவிடும். ஆதலின் வெட்டும் கடாவை எண்ணிய அருணகிரியார் அதற்கு மாற்றாகக் கலாப மயூரத்தை எண்ணுகிறார். 347