பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள் உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பது அந்த மயிலின் எண்ணம். ஆதலில் யாரையேனும் காப்பாற்ற வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு எழுந் தருளும்போது அவனை ஏற்றிக் கொண்டு வேகமாகச் செல்ல மயில் முன் வந்து நிற்கும். மயிலின் ஆற்றல் அதன் தோகையின் நிழல் பக்தர்களுக்கு அநுகூலம் செய்வது. அவர்களுடைய தாபம் தீரக் காற்றை வீசுவது. அது மாத்திரம் அன்று. மிகவும் பெரிய மயில் ஆதலினால் அது தோகையை விரிக்கும்போது தடையாக நிற்கிற பொருள்கள் எவையாக இருந் தாலும் அவை ஒடிவிடுகின்றன. முருகப் பெருமானை ஏற்றிக் கொண்டு போக வேண்டு மென்று எண்ணிய மயில் தன் அழகிய தோகையை விரிக்கிறது. அது மிகப்பெரிய தோகை. அதனை விரிக்கும்போது எழும்பும் காற்று உலகம் எல்லாம் சுற்றுகிறது. அதன் வேகத்தினால் எட்டுத் திக்குகளிலும் உள்ள கராசலங்கள் ஆகிய யானைகளும், குலகிரி களாகிய மலைகளும் இருந்த இடம் விட்டுப் பெயர்கின்றன. ரெயில் வண்டி வேகமாக ஒடும்போது உண்டாகும் காற்றினால் சருகுகள் ஓடுவதைப் பார்க்கிறோம்; அப்படி இவை இடம் விட்டு நகர்கின்றன. கராசலங்கள் எட்டும் குலகிரி எட்டும்விட் டோட தன்னுடைய விரிந்த தோகையைப் பரப்பி மயில் நிற்கும் போது அந்தத் தோகையின் எல்லை புறக்கண்ணினால் காண்பதற்கு அரிதாக அமைந்திருக்கிறது. உலகம் பிருதிவி முதலிய ஐந்து பூதங்களினால் ஆனது. இந்த ஐந்து பூதங்களில் ஒன்று பெளதிக ஆகாசம். இந்த ஆகாசத்தின் எல்லையை நாம் காணவில்லை; விமானிகளும் காணவில்லை. முருகப்பெருமானின் வாகனமாகிய மயில் ஆடும் போது அதன் தோகை இந்தப் பெளதிக ஆகாசத்தைக் கடந்து செல்கிறது. எல்லாவற்றையும் கடந்து பெருவெளி மட்டும் அது எட்டுகிறது. 349