பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 எட்டாதவெளி மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே. கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டுகிற ஆகாசம் பெளதிக ஆகாசம். அதற்கு மேலே அவற்றால் எட்ட முடியாமல் எல்லா வற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிற ஆகாசம் பரமா காசம். அது அளவுக்கு அப்பாற்பட்டது. அளக்கின்ற கருவி களினால் அளவிட முடியாதது. அந்த அளவுக்கு தன்னுடைய தோகையை விரிக்கும் ஆற்றல் உடையது மயில். மயிலின் தத்துவம் அது ஏதோ உலகத்தில் உள்ள பறவை போன்றது அன்று. அது ஒரு தத்துவம். எல்லாவற்றுக்கும் ஆதி தத்துவமாகிய நாதம் படைப்பிலே முதலில் தோன்றுவது. அந்த நாதத்திற்கு முன்னாலேயே பரமாகாசத்தில் தோன்றுகின்ற ஒலி பிரணவம் அல்லது ஓங்காரம். அந்த ஓங்காரம் எல்லாத் தத்துவங்களும் கடந்து நின்ற எல்லையில் எல்லாத் தத்துவங்களையும் தனக்குள் அடக்கிக் கொண்டு ஒளியாகவும், ஒலியாகவும் நிலவுவது. ஓங்காரமே கடவுள். கடவுளே ஓங்கார உருவத்தில் இருக்கிறான். ஓங்காரத்திற்குள்ளே ஒளியாக இருக்கிறான். "ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கார்” என்று முன்னாலேயே அருணகிரியார் பாடியதை நாம் பார்த்திருக் கிறோம். ஓங்காரமாகிய மயில் தன்னுடைய தோகையை விரிக்கும் போது அது இந்தப் பிரபஞ்சங்களை எல்லாம் கடந்து, தடை களாகிய எல்லைகளையெல்லாம் கடந்து பராகாச வெளி மட்டும் எட்டுகிறது. கராசலங்கள் எட்டும் குலகிரி யெட்டும் விட் டோட - என்று சொன்னது ஓர் அடையாளம். இந்த உலகத்திற்கு எல்லைகள் உண்டு. எட்டு யானைகள் எட்டுத் திசைகளில் நிற்கின்றன. அப்படியே எட்டு மலைகள் எட்டுத் திசைகளில் எல்லைகளாக இருக்கின்றன. பிரபஞ்சத்தின் வாசனை அடியோடு அற்றது என்ற 350