பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டுகோள் கருத்தையே, பிரபஞ்சத்தின் எல்லைகள் எல்லாம் தகர்ந்து ஓடின. என்று அழகாகச் சொல்கிறார் அருணகிரியார். ஓங்கார எல்லையில் ஒளி மயமாக இருக்கிற எம்பெருமான் தோன்றும் போது பிர பஞ்சத்தின் வாசனை முற்றும் அற்றுப் பராகாச வெளியில் ஆத்மா கலந்துவிடும். பிரபஞ்சச் சேற்றைக் கழியச் செய்கின்ற பேரரு ளாளன் முருகன் என்பதை அலங்காரத்தின் முதல் பாட்டிலேயே, “பிரபஞ்சமென்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா" என்று பாடினார். பிரபஞ்சம் என்ற தடையைப் போக்கி இறைவ னுடைய அருள் வெளியிலே நின்று ஆனந்த நடனம் செய்வது மயில். - அலங்காரச் சொல் சொல்வதை அலங்காரமாகச் சொல்கிறார் அருணகிரியார். யமனால் துன்பம் இல்லாமல் செய்யவேண்டுமென்று வேண்டு கோள் விடுப்பது அவர் கருத்து. ஆனால் அதனைச் சமத்காரமாகச் சொல்கிறார். 'அவன் குதிரை மேல் வருவான்; எங்கள் எசமான் யானை மேல் வருவான்' என்று இணைத்துச் சொல்வதுபோல யமனை, வெட்டும் கடாமிசை வருவான் என்று சொல்லி அடுத்து, கராசலங்கள் எட்டும் குலகிரி எட்டும்விட் டோடஎட் டாதவெளி மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே என்று சொன்னார். இந்தப் பாட்டின் ஒலியே திண்மையை நினைப்பூட்டுகிறது. அச்சம் இன்மையைக் காட்டும் வகையில் ஓசை உடையதாக இருக் கிறது. வல்லினங்கள் சேர்ந்து ஒலிப்பதனால் அந்தத் திண்மை புலனாகிறது. வெட்டும் கடாமிசைத் தோன்றும் என்று யமனை நினைக்கும்போது ஒரு வல்லினமெய்யை வைத் தார். மயிலைச் சொல்லும்போதோ, கராசலங்கள் எட்டும் குலகிரி எட்டும்விட் டோடஎட் டாதவெளி மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே 351