பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 'பின்துங்கி முன்எழும் பேதையே’ என்று திருவள்ளுவர் பாடியதாக ஒரு பாட்டு உண்டு. இந்த நாட்டு மகளிர்களுடைய உழைப்பு அத்தகையது. பராசக்தியின் திருவிளையாடலும் அத்தகையதுதான். பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் எத்தனையோ தத்துவங்கள் தோன் றும். அந்தத் தத்துவங்களிலும் மூலதத்துவம் நாதம். அதற்கும் முன்பு பராசக்தி தோன்றுகிறாள். பரசிவம் தொழிற்படத் தொடங் கியவுடன் பராசக்தி தோன்றுகிறாள். எல்லாத் தத்துவத்திற்கும் தாயாகிய அந்தப் பெருமாட்டி தோன்றிய பிற்பாடு பிரபஞ்சத் தோற்றம் தொடங்குகிறது. எல்லாத் தத்துவங்களும் ஒடுங்கும் போது தாயாகிய பராசக்தி எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக் கொண்டு தான் பரம சிவத்திடம் ஒன்றுவாள். எல்லாத் தத்துவங் களுக்கும் முன்னாலே தோன்றி, எல்லாத் தத்துவங்களுக்கும் பின்னாலே அடங்குவது, நம்முடைய வீட்டுத் தாய்மார்கள் முன் எழுந்து பின் தூங்குவது போன்றது என்று சொன்னால் அதில் தவறு ஒன்றும் இல்லை. அலுப்புச் சலிப்பு இல்லாமல் தாய்மார்கள் அத்தனை காரியங் களையும் எப்படிச் செய்கிறார்கள்? காலையில் எழுந்தால் உதய ராகத்தில் இறைவன் புகழைப் பாடுவார்கள். மற்ற நேரங்களிலும் லலிதா சோபனம், திருவிளக்குத் தோத்திரம், துளசி தோத்திரம், கந்தர் அலங்காரம் என்று இறைவன் துதிப் பாடல்களைப் பாடிக் கொண்டே வேலை செய்வார்கள். அதனால் வேலையில் உண்டாகிற சிரமம் அவர்களுக்கு இராது. பாடலால், விளையும் பயன் இரண்டு மைல் தூரம் நடந்து போகவேண்டுமென்றால் கந்தர் அலங்காரத்தைச் சொல்லிக் கொண்டு நடந்து பார்த்தால் தெரியும். இரண்டு மைல் நடந்திருப்போம்; ஆனால் நேரம் போனது தெரியாமல், வழி கடந்தது தெரியாமல், எளிதில் அந்தக் காரியம் ஆகிவிடும். என்னுடைய ஆசிரியர் அவர்கள் ஒன்று சொல்வார்கள். இறைவனுடைய பூசைக்கு மலர் பறிக்கும்போது துதிப் பாடல்களைச் சொல்லிக் கொண்டு பறிப்பார்களாம். பாடலும் நன்றாக மனனம் ஆகும்; செய்கிற வேலையும் எளிதில் நிறைவேறிவிடும். இதை அநுபவத்தில் காணலாம். மனத்துக்கோ உடம்புக்கோ இளைப்புத் தருகின்ற செயலில் ஈடுபடும் போது 26