பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் இப்படி ஒரு பழக்கத்தைச் செய்து கொண்டால் எளிதில் காலத்தைக் கழித்து வேலையை நிறைவேற்றிவிடலாம். உடம்பைச் சுமப்பதாகிய வேலையை எப்பொழுதும் செய்து கொண்டிருக்கும் நாம் உயிருக்கு வரும் துன்பத்தைப் போக்கிக் கொள்ள ஆண்டவனுடைய திருப்புகழைப் படித்து மனனம் செய்து சொல்லிக் கொண்டே இருத்தல் நல்லது. மனிதன் வாயினால் பேசுகிறான். அந்தப் பேச்சு வெறும் ஒலி அல்ல. அதில் பொருள் இருக்கிறது. வெறும் ஒலியாக இருக்கிற அழுகை முதலியவற்றுக்குக்கூட, பாவம் இருக்கிறது. மனிதன் வளர வளர நுட்பமான கருத்துக்களைத் தன்னுடைய பேச்சினால் தெரிவிக்கிறான். இலக்கியப் பெரும் புலவர்கள் தாம் உணர்த்த வேண்டிய கருத்துக்களை இலக்கியமாகப் படைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இலக்கியப் புலமையோடு ஆண்டவன் திருவருள் இன்ப அநுபவம் பெற்றவர்கள் மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை அழகான பாடல்களில் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பாடல்கள் எடுத்தவுடன் விளக்க மாகத் தோன்றுவது இல்லை. படிக்கப் படிக்க நம் மனப் பெட்டிக் குள் செல்கிறது. நாம் எவ்வளவு அதிகமாகப் பழகுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றைப் பற்றிய செய்திகளை மேலும் மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை நமக்கு எழுகிறது. ஒரு பாட்டை மனனம் செய்து கொண்டு விடுவோ மானால் அது சம்பந்தமாக செய்திகளை, அதன் பொருளை, அதன் கருத்து நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எழுகிறது. படிக்கும் திருப்புகழைப் போற்றி வைப்ப தனால் அடிக்கடி அதைச் சொல்கிற வழக்கம் உண்டாகிறது. சொற்களால் அமைந்த பாடல்களுக்குப் பொருளும் உண்டு. ஆகையால் பொருளைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். ஒருமுறை தெரிந்து கொள்வதோடு மட்டுமன்றி மேலும் மேலும் அறிந்து அதனூடே கிடக்கிற கருத்து நுட்பங்களையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். ஆர்வமும் அநுபவமும் அருணகிரிநாதப் பெருமானைப் போன்ற அருளாளர்கள் பாடிய பாடல்களில் மேலெழுந்தவாரியாகத் தோன்றுகிற பொருள் ஒன்று உண்டு. அதனூடே அநுபவ நுட்பம் சேர்ந்த கருத்தும் 27