பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 இருக்கும். எத்தனைக்கு எத்தனை அத்தகைய பாடல்களினூடே பழகுகிறோமோ அத்தனைக்கு அத்தனை அவற்றின் உள்ளே அமைந்திருக்கிற அநுபவக் கருத்துக்கள் நன்கு புலனாகும். அப்படி அநுபவக் கருத்துப் புலனாகும்போது அதனை அறிந்து கொள்ளும் அளவில் நாம் நின்றுவிட மாட்டோம். நாம் நடந்துகொண்டிருக்கும்போது வழியில் ஒரு காகிதம் கிடைக்கிறது. அதை எடுத்துப் பார்க்கிறோம். அதில் பல வகை யான உருவங்கள் இருக்கின்றன. நாம் படிப்புடை யவராதலால் அதிலுள்ள எழுத்துக்களைப் படிக்கிறோம். அது நூறு ரூபாய் நோட்டு என்று தெரிகிறது. முதலில் எடுத்தபோது நோட்டு என்று தெரியவில்லை. எடுத்துப் பார்த்தபோது நோட்டு என்று தெரிகிறது. எடுத்தது ஒரு செயல். ரூபாய் நோட்டு என்று தெரிந்து கொண்டது அறிவு. இந்த இரண்டோடு நாம் நிற்பது இல்லை. படத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிற செயல் வேறு வகையான காகிதங்களாக இருந்தால் அமையும். நம் கையில் கிடைத்தது ரூபாய் நோட்டு என்ற அறிவை நாம் பெற்றவுடனேயே அந்த நோட்டைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நினைவு எழுகிறது. ரூபாய் நோட்டு என்ற அறிவு அதனைச் செலாவணி யாக்கும் செயலில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதுபோல் இறைவனுடைய திருவருள் இன்ப அநுபவங்களைக் குறிக்கும் பாடல்களை மனனம் பண்ணி, அவற்றின் கருத்தை நாம் உணரும்போது, நமக்கும் அத்தகைய இன்பம் வேண்டு மென்ற ஆசை எழுகிறது. அதற்கு என்ன வழி என்று ஆராய்ச்சி செய்ய முனைகிறோம். அந்த இன்ப அநுபவத்தைப் பற்றிய அறிவு நமக்குத் தோன்றும் போது அதைப் பெறுவதற்குரிய முயற்சியும் உண்டாகிறது. அப்போது மனனம் செய்த பாட்டு நமக்குத் துணையாக நின்று வழிகாட்டுகிறது; நம்மைத் தூண்டி விட்டுச் சாதனத்தில் செலுத்துகிறது. 2 பயன் அருணகிரி நாதர், 'படிக்கும் திருப்புகழை நான் போற்று கிறேன். அதற்கு ஒரு பயன் எனக்கு அருளவேண்டும்” என்று சொல்ல வருகிறார். 28