பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அப்புறம் உணர்வாலே போட்டால் அநுபவம் என்ற வண்டி அதன் மேலே செல்லும்; அநுபவம் என்ற வண்டியில் உயிர் ஏறிச் செல்வதற்கு அந்தச் சாலை உதவியாக இருக்கும். பாடலும் யம பயமும் இறைவனுடைய திருப்புகழைப் படித்துப் போற்ற வேண்டு மென்று இந்தப் பாட்டில் சொன்னார். முன்பும் ஒரு பாட்டுப் பார்த்தோம். "இறைவனுடைய புகழைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே! நாளைக்கு யமன் வந்து கொடிய பாசக்கயிற்றை வீசினால் என்ன செய்வீர்கள்?' என்று சொன்னார். எப்படியோ திருப்புகழுக்கும் கூற்றுவனுடைய பாசக் கயிற்றுக்கும் ஒரு தொடர்பு இருப்பது தெரிகிறது. பாசக் கயிற்றை அறுக்கப் பாட்டு உதவும் என்று புலனாகிறது. 'அழித்துப் பிறக்கஒட் டாஅயில் வேலன் கவியைஅன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீர்எரி மூண்டதென்ன விழித்துப் புகைஎழப் பொங்குவெங் கூற்றன் விடும்கயிற்றால் கழுத்தில் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே?” என்ற பாட்டில் எதிர்மறை முகத்தால், அயில்வேலன் கவியை இப்பொழுதே படிக்க வேண்டும். பிழை இல்லாமல் படிக்க வேண்டும்' என்று வற்புறுத்தினார். 'உங்களுக்கு வரும் பெரிய துன்பமாகிய மரணத்தை மறந்துவிட்டுச் சும்மா இருக்கிறீர்களே, அதை மாற்றவேண்டுமானால், அயில் வேலன் கவியைப் பிழை யறக் கற்கவேண்டும்; அப்படிச் செய்யாமல் இருக்கிறீர்களே!' என்றார். பின்னே ஒரு பாட்டிலும் இறைவனுடைய புகழுக்கும், கூற்றுவனால் உண்டாகும் துயருக்கும் தொடர்பைக் காட்டுகிறார். முன்பு கற்கவேண்டுமென்பதைச் சொன்னார். இப்போது பார்க்கும் பாட்டில், கற்று மனனம் செய்யவேண்டுமென்று சொல்கிறார். இனி வரும் ஒரு பாட்டில் எதைக் கற்கக் கூடாது, எதைக் கற்கவேண்டுமென்று விதி, விலக்கு இரண்டையும் சொல்கிறார். 'கிழியும் படியடற் குன்றுஎறிந் தோன்கவி கேட்டுஉருகி இழியும் கவிகற் றிடாதுஇருப் பீர்எரி வாய்நரகக் குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச்செல்லும் வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே’’ 3O