பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் 'நான் திருப்புகழைப் படித்து, அப்படிப் படிக்கும் திருப் புகழை மனத்திலே வைத்துப் போற்றுவேன். அதனுடைய பயனாக யமன் வரும்போது நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டிக் கொள்ளும் பாட்டை இப்போது கேட்கிறோம். படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினால் பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய். 3 இனி அவர் சில கதைகளைச் சொல்கிறார். சொல்கிற கதையில் கருத்து இல்லாமல் சொல்வது அவருக்கு வழக்கம் அன்று. புராணக் கதைகளே கருத்துடையவை. புராணம் என்று சொல்லுக்குப் பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமை யாகவும் இருப்பவை என்று பொருள். கதை நிகழ்ந்த காலம் பழையது. அதனால் பயன் உண்டாகும் காலம் புதியது. அப்படி யுள்ள சில புராணக் கதைகளை இங்கே நினைப் பூட்டுகிறார். அருணகிரிநாதர் முருகப் பெருமானுடைய துதியாக அலங் காரத்தைச் செய்தாலும் ராமனும், கண்ணனும், சிவ பெருமானும், உமையும் இடையே வந்து சேருவார்கள். அவருடைய திருவாக்கில் வராத தெய்வங்கள் இல்லை. முன்பு திருவிக்கிரமாவதாரம் எடுத்த திருமாலைப் பார்த்தோம். பிறகு கடல் அடைத்த ராமபிரானைப் பார்த்தோம். இப்போது கண்ணபிரானை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். காளிங்க நர்த்தனம் செய்தவருடைய மருகன் முருகன் என்று சொல்கிறார். காளிங்க நர்த்தனன் பெரும் பாம்பில் நின்று நடிக்கும் பிரான் மருகா! கண்ணபிரான் ஆகிய மாமனுக்கு மருமகனே என்று சொல் கிறார். மகாகவிகள் தாம் சொல்கிற சொல்லைப் பொருள் உடைய தாகச் சொல்வார்கள். 'நான் திருப்புகழ் படிப்பேன். படித்து மனனம் பண்ணுவேன். யமன் தன் பாசத்தினால் என்னைப் பிடிக்க வரும்போது நீ வந்து அஞ்சல் என்பாய்' என்று முதல் பகுதியில் சொன்னவர், அடுத்துக் காளிங்க நர்த்தனக் கண்ணபிரானைச் சொல்லக் காரணம் என்ன? அதைச் சற்றே இங்கே பார்க்கலாம். 3i