பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் எல்லாம் நஞ்சைப் பரப்புகிற பாம்பின் மேலே இறைவன் திருவடி பட்டால் போதும்; அவற்றை ஆட்ட முடியாமல் அது நிற்கும்; ஒருமுகப்படும். இந்தத் தத்துவத்தை உள்ளடக்கியது காளிங்க நர்த்தனம். 'பெரும் பாம்பின் மீது நின்று ஆனந்தத் தாண்டவம் ஆடிய கண்ணபிரானின் மருகன் அல்லவா நீ?" என்று எடுத்துச் சொல்கிறார் அருணகிரியார். பெரும் பாம்பில் நின்று நடிக்கும் பிரான் மருகா! மயிலின் இயல்பு கண்ணபிரானுடைய மருமகனே என்று முருகனைப் பார்த்துச் சொன்னவுடன் முருகப் பெருமானின் வாகனம் அவருக்கு நினைவு வருகிறது. பாம்பின்மீது நின்று கண்ணபிரான் மாத்திரமா நர்த்தனம் செய்தார்? மயில்கூட இந்தக் காரியத்தைச் செய்கிறது. அதுவும் பெரும்பாம்பில் நின்று நடிப்பதுதான். பாம்புக்கு ஜன்மப் பகை யாகிய மயில் முருகப் பெருமானின் வாகனம். அது தன் காலடி யில் அசைய முடியாமல் பாம்பை அமிழ்த்திக் கொண்டிருக்கிறது. இதை நீங்கள் படத்தில் பார்த்திருப்பீர்கள். எம் பெருமானின் வாகனமே பாம்பின் மீது நடிக்கிறது என்ற நினைவு வந்தது. உடனே அந்த மயில் எத்தகையது என்று சொல்கிறார்.அருணகிரியார். சூரனது நடுக்கம் கொடும் சூரன் நடுங்க வெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே! சரவணப் பொய்கையில் முருகன் அவதாரம் செய்திருக்கிறான் என்று கேட்டுச் சூரன் நடுங்கினான். அந்தக் குழந்தை எப்போதும் மயில் மீதே திரிகிறான் என்ற செய்தி அவன் காதுக்கு எட்டியது. மயில் சாமானியப் பறவைதானே என்று முதலில் எண்ணினான். ஆனால் அவனிடம் வந்தவர்கள், "அவன் மயிலை வெறும் பறவை என்று சொல்லலாமா? அதற்கு வன்மையான காரியங்களைச் செய்ய முடியாது என்று நினைக்க கூடாது. அது பறந்து போகும் போது அதன் அருகில் ஒரு மலை இருந்தது. அந்த மலை இடிந்து விட்டது. அந்த மயில் இறக்கைகள் அடித்துக் கொண்டாலே மலைகள் தூள் தூளாகப் போகின்றன” என்று சொன்னார்கள். 33