பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அப்போது சூரன் மனமும் இடிந்து விட்டது. 'நமக்கு யமனாக அவதாரம் செய்திருப்பவன் இந்த மயிலின் மீது ஏறி வருகிறா னாம்' என்று எண்ணியவுடன் தன் பலத்தை இழந்து நடுங்கினான். பொல்லாத காரியங்களைச் செய்பவர்கள் எத்தனை பலம் உடையவர்களாக இருந்தாலும் நடுங்கிக் கொண்டிருப்பார்கள். திருடனைப் பாருங்கள்; எப்போது போலீஸ்காரன் பிடித்து விடுவானோ என்று ஒவ்வொரு கணமும் உள்ளத்திற்குள் செத்துக் கொண்டிருப்பான். வெளிக்குத் தைரியம் உள்ளவனாகப் பேசலாம். இருந்தாலும் உள்ளம் பட்பட்டென்று அடித்துக் கொண்டிருக்கும். திருடன் பலசாலியாக இருப்பான். அவனைப் பிடித்த போலீஸ் காரன் நோஞ்சையாக இருந்தாலும் அவனிடம் திருடன் பிடிபடு வதற்குக் காரணம் திருடன் மனத்திலுள்ள நடுக்கம். யானையைச் சிங்கம் வெல்கிறது அல்லவா? முருகனின் அழுகைக் குரல் கேட்டவுடன் அச்சத்தால் அழுதவன் சூரன். கோல மயில் மீது இப்போது ஏறி வருகிறான் என்று கேட்டவுடன் திடுக்கிட்டான்; நடுங்கினான். இவ்வாறு கற்பனை பண்ணி ஒரு காட்சியைச் சொல்கிறார் அருணகிரியார். எம்பெருமான் சூரனைச் சங்காரம் செய்யப் போகிறான். சங்காரம் நடப்பதற்கு முன் கொடுந்தீமை புரிந்து வந்த சூரன் பலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. கடைசியில் சூரசங்காரம் நடக்கிறது. திண்மையான மலையை உடைப்பதற்குத் துளை போட்டு மருந்தைக் கெட்டித்து வெடிப்பார்கள். பெரும் பெரும் பாறையாக விரிசல் கண்டவுடன் பின்னர் உடைப்பார்கள். அவ்வாறு திண்மையாக இருந்த சூரன், கொடுமையே உருவாக இருந்த சூரன், நாசம் அடையவேண்டும். அதற்கு முன்பு அவன் பாறை போன்ற உள்ளத்தில் தைரியத்தை உடைத்து, அவனை நடுங்கச் செய்து, படைகளை அழித்துப் பிறகு அவனை அழிக் கிறான் ஆண்டவன். மலைபோல் உறுதியாக இருக்கிற அவனை, 'எம்பெருமான் கோல மயில் மீது வருகிறான். அந்த மயில் இறக்கையை அடித்துக் கொண்டு பறந்தது. மலை இடிந்து விழு கிறது" என்ற செய்தியைக் கேட்டு உள்ளத்தின் உறுதி இடிய, நடுங்க வைக்கிறான் எம்பெருமான். 34