பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிக்கும் திருப்புகழ் கொடுஞ்சூரன் நடுங்க வெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில். வெற்பு - மலை, கலாபம் - தோகை. மென்மையும் வன்மையும் இதில் ஒரு நுட்பமான சிறப்பு இருக்கிறது. மெத்தென்ற தோகையை உடையது மயில், அது சிறகை அடித்துக் கொண்டால் மலை இடிந்துவிடுமா என்று கேட்கலாம். சூரியன் தோன்றினால் தாமரை மலர்கிறது. அதை மலரச் செய்யும் சூரியனே புழுக்களை யும் பூச்சிகளையும் சாக அடிக்கிறான். அதே போன்று இறைவன் திருவருள் பக்தர்களுக்கு மென்மையானதாக, இன்பம் தருவதாக இருக்கிறது. யார் இறைவனை நினையாமல் அடியார்களுக்குத் தீங்கு செய்கிறார்களோ அவர்களுக்கு அதே அருள் வன்மையாகத் துன்பம் அளிப்பதாகத் தோன்றும். இது மயிலின் செயலால் தெரிகிறது. ஆண்டவனுடைய அடியார்களுக்கு மெத்தென்று இருக்கிற மயில் ஆண்டவனுடைய திருவருளை நினையாமல் வாழ்கிறவர்களுக்குக் கடுமையாக இருக்கிறது. தன் தோகையை அடித்துக் கொள்வதன் மூலம் மயில் இதைக் காட்டுகிறது. தோகையை அடித்துக் கொண்டு வரும்போது அடியார்கள் எல்லாம் உவகை அடைகிறார்கள். மலை ஆடுகிறது; இடிகிறது. அதைக் கண்டு சூரன் உள்ளம் நடுங்குகிறது. முன்பு ஒரு பாட்டில் மயிலின் வேகத்தை விரிவாகப் பாடியிருக்கிறார் அருணை முனிவர். (11) 'குசைநெகி ழாவெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து அசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடஎண் திசைவரை தூள்பட்ட, அத்துளின் வாரி திடர்பட்டதே." இங்கே முருகனை, 'இராவுத்தனே' என்று சொல்கிற அருண கிரியார், முன்பும் "கண்டுண்ட சொல்லியர் என்னும் பாட்டில் (37), "வெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே' என்று சொல்லியிருக்கிறார். யானையைப் பழக்குகிறவனை மாவுத்தன் என்றும், குதிரையைப் பழக்குபவனை இராவுத்தன் என்று சொல்வார்கள். 35