பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் பாடக்கூடும் என்று நினைத்தார்கள். அவரவர்கள் தங்கள் பாட்டை வாசித்தார்கள். ஆனால் பாட்டியோ, 'வரப் புயர' என்று சொல்லி நிறுத்தினாள். இந்தக் காலமாக இருந்தால் பாட்டிக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருப்பார்கள். பழங்காலத்தில் பெரியவர் யாரேனும் ஒன்று சொன்னால் அதை மறுத்துக் கேள்வி கேட்கும் வழக்கம் இல்லை. பெரியவர்களைப் பெரியவர்கள் என்று தெரிந்துகொண்ட பிற்பாடு அவர்கள் சொல் வதில் நம்பிக்கை வைத்து அன்போடு கேட்பார்கள். ஆகவே புலவர்கள் பாட்டியிடம் சென்று, 'பாட்டி, இன்று தான் எங்கள் அறியாமை வெளிப்பட்டது' என்று சொன்னார்கள். “எதற்காக இப்படிச் சொல்கிறீர்கள்?' என்று அந்தப் புலவர்களைப் பாட்டி கேட்டாள். 'நீங்கள் அரசவையில் வரப்புயர என்று சொன்னீர்கள். முடிசூட்டு வைபவத்தில் இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு விளங்க வில்லை' என்றார்கள். பாட்டி புன்னகை பூத்தாள். 'நீங்கள் சொன்ன தொடருக்குப் பொருளை விளக்க வேண்டும்' என்று புலவர்கள் கேட்டுக் கொண்டார்கள். பாட்டி விளக்கத் தொடங்கினாள். 'வரப்புயர என்று நான் சொன்னேன். வரப்பு வயல்களில் இருக்கும். வயல்களில் வரப்பு அமைப்பது நடப்பதற்காக அன்று. நீர் தேங்கி நிற்பதற்கு வரப்பு அமைக்கிறார்கள். ஆகவே வரப்பு உயர்ந்தால் நீர் உயர்ந்து தேங்கும். நீர் உயர்ந்தால் வயல்களில் பயிர் செழித்து உயரும். பயிர்கள் செழித்தால் நல்ல விளைச்சல் ஏற்படும். நல்ல விளைச்சலினால் குடிமக்கள் பசியின்றி உண்டு வாழ்வார்கள்; மேலும் வளங்களைச் சேர்த்துக் கொள்வார்கள். குடிகள் உயர்ந்தால் கோன் ஆகிய அரசன் உயர்வான். அரசனுடைய உயர்வுக்கு மற்ற மற்றக் காரணங்கள் இருந்தாலும் அடிப்படை யான காரணம் நீர்வளமும் நில வளமும் மிகுதியாவது தான்.' இத்தனை கருத்தை வைத்து வரப்புயர என்று சொன்னாள் பாட்டி க.சொ.1V-4 39