பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 'உலகிலுள்ள உயிர்கள் உடம்போடு வாழ்கின்றன என்றார். 'உம்' என்றான் பாண்டியன். 'அந்த உடம்புகள் சோற்றால் வாழ்கின்றன. அந்தச் சோறு நிலமும் நீரும் சேருவதால் உண்டாவது. நிலமும் நீரும் சேர்ந்தால் நிறைய உணவு விளையும். உணவினால் நாட்டில் வாழும் மக்களுடைய உடம்புகள் காப்பாற்றப்படுகின்றன. மேலும் மேலும் மக்கள் பிறக்கிறார்கள். ஆகவே நீரையும் நிலத்தையும் ஓரிடத்தில் சேமிப்பவர்கள் நாட்டில் வாழும் மக்களது உடம்பிலே உயிர் தரிக்கும்படி செய்பவர்கள். நிலம் இருந்தால் போதாது. விதை விதைத்தாலும் போதாது. நிலத்தில் நீர் தேங்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் விதைத்த விதை முளைக்கும். மேடாக இருக்கும் நிலங்களைப் பள்ளமாக்கினால் தான் நீர் தேங்கும். யார் தண்ணிரைத் தேக்கி வைக்கிறார்களோ அவர்கள் உலகில் அழியாப் புகழைத் தேக்கிக் கொள்வார்கள்.' 'தட்டோ ரம்ம இவண்தட் டோரே தள்ளா தோரிவண் தள்ளா தோரே' என்று பாடி முடித்தார் புலவர். அப்படிச் சொன்ன பிறகுதான் அரசனுக்கு தன்னுடைய தவறு நன்றாகப் புலப்பட்டது. பிறகு ஆறு குளங்கள் முதலியவற்றைச் செப்பம் செய்யப்புகுந்தான். புலவர் பெருமான் அரசனுக்கு அவ்வாறு சொன்னதற்குக் காரணம் மக்கள் நன்றாக வாழவேண்டு மென்ற நோக்கந்தான். பசித்துன்பம் உடம்பு வாழ்வதற்குச் சோறு மிக அவசியம். சோறு இல்லா விட்டால் பசிநோய் உண்டாகும். எல்லா நோய்களையும்விடப் பெரியது பசிநோய். அது வந்துவிட்டால் எல்லா வகையான அறங்களும், ஆசாரங்களும் அழிந்து போகின்றன. சந்நியாசிகளையும் பசித் துன்பம் விடுவது இல்லை. பசி வந்துவிட்டால் அவர்களுக்கும் அறிவு மங்கிவிடும். எத்தனையோ 1. தட்டோர் - நீரைத் தடுத்தவர். இவண் - இவ்வுலகத்தில். தட்டோர் - புகழைத் தேக்கியவர்கள். தள்ளதோர் - தேக்காதவர்கள். 46