பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 போது, ஜனத்தொகை மிகுதியாகிற இந்தக் காலத்தில், 'இடம் பட வீடிடேல்' என்ற உண்மை எவ்வளவு சிறப்பானது என்பதை உணரவேண்டும். செல்வரும் அன்னதானமும் இந்த நாட்டில் செல்வர்களை மதிப்பிடும் முறையே வேறு; எத்தனை பங்களாக்கள், எத்தனை கார்கள் ஒருவனிடம் இருக் கின்றன என்பதைக் கணக்கெடுத்துப் பார்த்து, இன்னான் பணக் காரன் என்று சொல்வது வழக்கம் அன்று. ஒருவன் வீட்டுக்குள் இருந்து எத்தனை எச்சில் இலைகள் தெருவிலே வந்து விழு கின்றன என்பதைக் கணக்கு எடுத்தே இன்னான் பணக்காரன் என்று சொன்னார்கள். 'சோறு இல்லாமற் செத்தவன் இல்லை” என்று பழமொழியைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண் டிருந்தோம். இந்தப் பழமொழி நம் நாட்டிலுள்ள மக்களின் தர்ம சிந்தையை மாத்திரம் காட்டவில்லை. நாட்டு மக்களின் முயற்சி யையும் காட்டுகிறது. நிறைய நெல் விளைந்தால் தான் அறம் செய்ய முடியும். பழைய காலத்தில் எல்லா மக்களும் சோம்பல் இல்லாமல் வேளாண்மை செய்தார்கள். பிச்சை கேட்கிறவன் ஒரே ஒருவன்தான். அவன் துறவி. 'பவதி பிட்சாந் தேஹி என்று துறவிகள்தாம் கேட்பர். இரவலர் என்ற பெயர் கலைஞர்களுக்கு உரியதாக இருந்தது. பாணர். புலவர், கூத்தர் ஆகிய இவர்கள் அங்கங்கே சென்று தம் கலைத்திறத்தைக் காட்டி வள்ளல்களிடம் பரிசு பெற்றார்கள். அவர்களையன்றிப் பிறரிடம் பிச்சையென்று இரப்பவர்கள் மிக அரியர். ஆனால் நாளடைவில் அந்த நிலை மாறிப் பலர் பிச்சையெடுக்கும் நிலை வந்துவிட்டது. அருணகிரி நாதர் காலத்தில் பலர் பிச்சை எடுத்தார்கள். அன்னத்தை மிகுதியாக விளைத்த நாடாக இது இருந்தது. மனிதன் முதலில் உயிர் வாழ வேண்டும். மற்ற வளங்கள் பெறுவது பின்பு. உயிர்வாழ்வதற்கு உடம்பு வாழவேண்டும். உடம்பு அன்னத்தாலானது என்ற உண்மை யாவருக்கும் தெரிந்தது. இந்த நாட்டில் தொழில் துறையில் மிகுதியான கவனம் செலுத்தவில்லை என்று குறை கூறுகிறோம். எத்தனை தொழில்கள் வளர்ந்தாலும் மனிதனுடைய மூலத் தேவையாகிய சோறு கிடைக்கவில்லையென்றால் மற்றத் தொழில்களினால் 5C