பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் பலன் இல்லை. ஆதலினால் இந்தியா பெரிய வேளாண்மை நாடாக இருந்தது. சடையப்ப வள்ளல் தமிழிலே இராமாயணம் என்ற பெரும் காப்பியத்தைச் செய்த கவிச்சக்கரவர்த்தி கம்பநாட்டாருக்குச் சோறு அளித்து அவரைக் காப்பாற்றினார் சடையப்ப வள்ளல். இந்தப் புலவருக்கு அளித்ததைப் போல இன்னும் பலருக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுத்திருக்கிறார் அவர். ஒருநாள் அவரிடம் பரிசு பெற்றுப் போக ஒரு புலவர் வந்தார். அப்போது சடையப்ப வள்ளல் நெல்மூட்டைகளைத் தம் முடைய வீட்டுக்குள் கொண்டுபோய் அடுக்கிக் கொண்டிருந்தார். வரும் வழியில் வண்டியில் இருந்து நெல் சிந்தியிருந்தது. வள்ளல் அந்த நெல்லைப் பொறுக்கித் தம் மேல்துண்டில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த புலவர், 'வீதியில் சிந்திக் கிடக்கிற நெல்லைப் பொறுக்கும் கருமியாக இருக்கிறாரே! இவர் நமக்கு எங்கே பரிசு கொடுக்கப் போகிறார்?" என்று எண்ணினார். புலவருடைய முகத்தைப் பார்த்தபோது சடையப்ப வள்ளலுக்கு அவருடைய எண்ணம் விளங்கியது. சடையப்பர் அந்தப் புலவரைத் தம் வீட்டுக்குள் அழைத்துச் சென்று இனிமையாகப் பேசிச் சாப்பிட்டுப் போக வேண்டு மென்று சொல்லி இலையைப் போட்டு உட்கார வைத்தார். ஆனால் இலையில் சோற்றை வைப்பதற்குப் பதிலாகக் கைநிறையப் பொன்னைக் கொண்டு வந்து வைத்தார். அதைப் பார்த்த புலவர் முகத்தைச் சுளித்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. 'என்ன அப்படிப் பார்க்கிறீர்களே! நெல்லைப் பொறுக்கும் போது ஒருவிதமாகப் பார்த்தீர்கள். நெல்லைவிடப் பொன் உயர்ந் தது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்பதற்காகப் பொன்னைக் கொண்டுவந்து வைத்தேன். இப்போது மலைத்து விட்டீர்களே!' என்றார் சடையப்ப வள்ளல். புலவருக்கு உண்மை புலனாகியது. 'பொன்னால் உடம்பு வளராது. அரிசி உடம்பை வளர்க்கும் என்பதை உணர்ந்தேன்” என்றார் புலவர். இப்படி மணிமணியாக 51