பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 தாலும் இருக்கிறதை இருக்கிறபோதே முதலில் அவனுக்கு ஒரு பிடி கொடுத்துவிட்டு உண்ணுவதே உயர்வு. பொதுவுடைமைக் கொள்கை தர்மம் செய்வதற்கு இன்ன இன்ன பொருள் வேண்டு மென்று அருணகிரியார் சொல்லவில்லை. மனிதராகப் பிறந்தவர் எல்லோரும் தர்மம் செய்யவேண்டுமென்று அவர் நினைக்கிறார். பணக்காரர்களுக்குத்தான் அறம் உண்டு. மற்றவருக்கு இல்லை என்று சொல்ல இயலாது. பசி எனக் கேட்பானுக்கு ஒரு பிடி அன்னமிட்டாலும் போதும். ஒரு பிடிதான் கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ள மனிதனுக்கு அதுவே பெரும் பயனைத் தரும். அருணகிரியார் சொல்வது ஒரு வகையான பொது வுடைமைக் கொள்கை. அவர் திட்டம் பணக்காரர்கள் மாத்திரம் அல்ல. அன்றாடம் கீரை கிழங்குகளை வேகவைத்து உண்ணு கிறவர்களும் பங்குகொள்ளக் கூடியது. அவர் சொல்வதில் மற்றோர் உண்மையும் அடங்கியிருக் கிறது. வெந்தது எல்லாவற்றையும் தானம் செய்து விடு என்று அவர் சொல்லவில்லை. "உனக்கு வைத்துக் கொண்டு அவனுக்குக் கொடு. உனக்கு இல்லாமல் அவனுக்குக் கொடுக்க வேண்டாம். இரண்டு பேரும் கலந்து பகிர்ந்து உண்ணுங்கள்' என்றே சொல்கிறார். மாதவம் இப்படிச் செய்கிற தானமே தவமாகும் என்று அருணகிரியார் பேசுகின்றார். அன்பின் நிலையான மாதவம் செய்குமினோ. - 'தவம் செய்யவேண்டுமென்று நினைக்கிறாயே. இந்திரிய நிக்கிர கம் செய்வதுதான் தவம் என்று நினைக்காதே. தவம் செய்கிற வனுடைய ஆற்றலைவிடப் பிறருடைய பசியைப் போக்குகிறவன் ஆற்றல் பெரிது என்பதை வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆகவே பசியைப் போக்கும் தவத்தைச் செய். அதையும் அன்போடு செய். அது அழிவில்லாத நிலையான தவம்' என்று அவர் நமக்கு 56