பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதிசோறும் துணையும் காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியவை வருவதற்கு நியாயம் இல்லை. ஆண்டவனுடைய நினைவோடு செய்கிற அறந்தான் நிலை யான மாதவம் ஆகிறது. தர்மங்கள் செய்கிறபோது நம்மை நினைத்தால் அவா வளரும். அதுவே வெறும் கர்மம் ஆகிறது. இறைவனை நினைந்து செய்தால் அதுவே கர்ம யோகம் ஆகிறது. கர்மயோகமும் ஒருவகைத் தவந்தான். ஆகவே, நாம் பிறருடைய பசியைத் தீர்க்கும்போது இறை வனை நினைத்துக்கொண்டு அந்தச் செயலைச் செய்தால் வேறு எந்தவிதமான உணர்ச்சியும் வந்து தடைப்படுத்தாது. அதுவே தவமாக முடியும். மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினானை வணங்கி, அன்பின் நிலையான மாதவம் செய்குமினோ என்று அருணகிரியார் சொல்வது இந்த நுட்பத்தை நமக்குத் தெரிவிப்பதற்காகக்தான். கிரெளஞ்ச மலை பிளந்தது ண்டவனை எவ்வாறு இங்கே புகழ்கிறார்? அவன் கிரெளஞ்ச மலையின்மீது வேலைவிட்டான். அது பிளந்து போய் விட்டது. ஆறு கூறாகப் பிளந்தது. கூறு-துண்டு. கிரெளஞ்சமலை ஆறு துண்டுகளாகப் பிளந்து விட்டது. முருகப்பெருமானுக்கு ஆறுமுகங்கள் இருப்பது போல வேலுக்கும் ஆறு பட்டை உண்டு. ஆறு பட்டையையுடைய வேல் பாய்ந்ததால் மலை ஆறு கூறு களாகப் போயிற்று. மலைமீது வேலைவிட்டவன் எம்பெருமான். அவனை நினைந்து, அவன் என்னிடம் பொருளைக் கொடுத்து வந்தவனிடம் பசியைக் கொடுத்து அவனை என்பால் அனுப்பி இருக்கிறான் என்று நினைவோடு, கூழ் குடித்தாலும், அதையா வது கொடுத்திருக்கிறானே என்ற நன்றி அறிவோடு அதைப் பகிர்ந்தளித்து நாம் அறம் செய்தால், அதுவே நிலையான மாதவம் ஆகும். நிலையான மாதவம் என்பது நெடுங்காலத்துக்குப் பின்னும் வந்து கைகொடுக்கும் தவம். 59