பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அன்பின் நிலையான மாதவம் செய்குமினோ. அன்பு இருந்தால்தான் வறியவனைக் கண்டு எள்ளத் தோன்றாது. இறைவன் நினைவு உண்டாகும். - மரணம் அடைந்த பிறகு செல்லும் வழிக்குத் துணையாக இருப்பது இந்தத் தவம் என்று சொன்னார் அருணகிரிநாதர். மற்ற ஒன்றும் பற்றித் தொடராது. "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே” என்று பட்டினத்தார் சொன்னார். வழித்துணை நமக்கு வழித் துணையாகிய அறங்களில் சிறந்த அறம் ஈகை. ஈகையில் சிறந்தது அன்னதானம். அன்னதானத்தை இறை வன் நினைவோடு செய்யவேண்டும். செய்வது ஒரு பிடியாக இருந்தாலும் அதனால் உண்டாகிற புண்ணியம் மலையாக இருக்கும். இப்போது செய்கிற அறம் சிறிதாகத் தோற்றினாலும் அது பயனாக விளையும்போது பெரிதாக இருக்கும். மூடி வைத் திருக்கும் குடை சிறிதாகத் தோற்றலாம். வெயிலில் விரிக்கும் போது பெரிதாகத் தோற்றுகிறது. கிரெளஞ்சமலை ஆறு கூறுகளாகப் போகும்படி வேல் வாங்கின வனை அன்பால் நினைந்து வணங்கி, "நான் கொடுக்கிறேன்" என்ற அகந்தை ஒழிய, நம்மிடம் கொடுப்பதற்கு இதுவாவது இருக்கிறதே என்று எண்ணி, இலையாயினும் வெந்தது ஏதாயி னும் யாசிப்பவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கவேண்டும். அப்படிச் செய்வது நிலையான பெரிய தவம். தொலையா நெடுவழியில் நாம் போகும்போது நம்மைப் பாதுகாக்கும் பொதிசோறாகவும் துணையாகவும் அந்தத் தவம் வந்து விளையும் என்பதை இந்தப் பாட்டின் மூலம் வலியுறுத்துகிறார் அருணகிரியார். ★ மலைஆறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கிஅன்பின் நிலையான மாதவம் செய்குமி னோதும்மை நேடிவரும் 60