பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 இலக்கணப் பிழை எதுவும் இன்றிப் பொறுக்கி உருவம் குலை யாத வார்த்தைகளைப் போட்டு எழுதுவது செந்தமிழ். பேசும் போது நாம் வளைந்து வளைந்து சென்று பேசுகின்றோம். ஆகவே இதற்குக் கொடுந்தமிழ் என்று பெயர் வந்தது. குழந்தை வளைந்து வளைந்து நடப்பது எப்படித் தவறு இல்லையோ அப்படிப் பேசுவதில் செந்தமிழ் இல்லாமல் வளைந்து வளைந்து கொடுந்தமிழில் பேசுவது தவறு என்று கருதுவதில்லை. பேச்சுத் தமிழ் எப்போதும் கொச்சையான தமிழாக இருக்கும். கொச்சைத் தமிழிலே எழுதினால் எல்லாப் பகுதி மக்களும் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே எல்லோருக்கும் பொதுவான செந்தமிழில் எழுதுவார்கள். அப்படியே பேசப்பட்ட பிராகிருத மொழி வேறு; பிராகிருதத்திலிருந்து நன்றாகத் திருத்திச் செய்யப்பட்டது சம்ஸ் கிருதம். சம்ஸ்கிருதம் என்றாலே நன்றாகச் செய்யப்பட்டது என்பதுதான் பொருள். சம்ஸ்கிருதத்தை ஒத்த மதிப்பைப் பெற்ற மொழி தமிழ், சம்ஸ்கிருதத்தில் வேதம் உண்டு என்றால், தமிழ் வேதமாகிய தேவாரமும் திவ்யப் பிரபந்தமும் தமிழ்மொழியில் உண்டு. சம்ஸ்கிருதம் எத்தனை பழையதோ அத்தனை பழையது தமிழ். ஹிந்தி மொழியைப் பரமேசுவரன் உபதேசித்தான் என்று யாரும் சொல்லவில்லை. சம்ஸ்கிருத மொழியின் இலக்கணத்தைப் பாணினிக்கும், தமிழ் மொழியின் இலக்கணத்தை அகத்தியருக் கும் பரமேசுவரன் உபதேசித்தான் என்று பல இடங்களில் புலவர்கள் சொல்லி இருக்கிறார்கள். "விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கணம் மேனாள் வடமொழிக்குரைத் தாங்கியல் மலயமா முனிக்குத் திடமுறுத்தியம் மொழிக்கெதி ராக்கிய தென்சொல்' என்று பரஞ்சோதி முனிவர் கூறுகிறார். இரண்டு மொழிகளும் பரமேசுவரனுக்கு உகந்த மொழி; இரண்டு மொழிகளிலும் பல காலமாகப் பல பல பெரிய புலவர்கள் பாடியிருக்கிறார்கள். ஒரு பொருள் பல காலம் இருக்க வேண்டுமானால் அதற்குப் பலம் வேண்டும்; எத்தனைக்கு எத்தனை கப்பும் கிளையுமாக மரம் படர்ந்து கிடக்கிறதோ அத்தனைக்கு அத்தனை அதன் வேர் பூமிக்குள் நெடுந்தூரம் ஓடியிருக்கும். சமய நூல்களும் காவியங்