பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் களும் இலக்கியங்களும் தமிழ் வடமொழிகளில் அதிகமாக இருப்பதிலிருந்தே தமிழ் வடமொழி ஆகியவற்றின் வேர்கள் மிக்க பலம் உடையவை என்று தெரியவரும். சம்ஸ்கிருதத்தில் பேசுவோர் இல்லை என்கிறோம். அது ஒரு குறையன்று. நாம் எழுதும் செந்தமிழில் பேசுவோரும் இல்லை. இரண்டு மொழி யும் பரமேசுவரனால் உபதேசிக்கப்பட்ட மொழியாகையால் இரண்டையும் நம் நாட்டவர்கள் சமமாகவே கண்டார்கள்; வட மொழி தமிழ்மொழி ஆகிய இவ்விரண்டிலும் இருந்துதான் மற்ற மற்றப் பாரதநாட்டு மொழிகள் எல்லாம் உருப்பெற்று வளம் பெற்றன. இயற்கையான பேச்சில் இந்த இரண்டு மொழியும் கலந்தே வருகின்றன. வடமொழியின் பொதுத்தன்மை ஆங்கிலம் நம் நாட்டு மொழியே அன்று. இருப்பினும் ஆங்கிலப் பத்திரிகைகள் நம் நாட்டில் இருந்து வெளிவருகின்றன. இந்த நாட்டில் தெலுங்கு பேசுபவராக இருந்தாலும், தமிழ் பேசுபவராக இருந்தாலும், வங்காளம் பேசுபவராக இருந்தாலும் பத்திரிகை வாங்கிப் படிப்பவர்கள் பொதுவாக ஆங்கிலம் படித்த வர்களாக இருப்பதால் ஆங்கிலத்தில் பத்திரிகைகள் வருகின்றன. அதுபோலப் பழைய காலத்தில் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் கற்றவர் சம்ஸ்கிருதமும் படித்தவராக இருந்தமை யால் எல்லோருக்கும் பயன்படவேண்டி மணியின் லட்சணம், வேதாந்தம், ஆகமம், சித்தாந்தம் முதலிய நூல்களை வடமொழி யில் எழுதி வைத்தார்கள். அதை உணர்ந்து கொள்ளாது வடக்கே இருப்பவர்களுக்கு மட்டும் பயன்பட வேண்டுமென்று வட மொழியிலே எழுதி வைத்தார்கள் என்று சொல்வது சரியல்ல. வடமொழி அறிந்த தமிழர் தென்னாட்டிலுள்ள பிராமணர்களுக்குத்தான் சம்ஸ்கிருதம் தெரியும் என்று சொல்வதும் தவறு. வடமொழியை நன்றாகக் கற்றுணர்ந்த சைவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். வால்மீகி இராமாயணத்தில் ஒவ்வொரு பகுதியை யும் படித்து நன்றாகச் சுவைத்துப் பின்னர்த் தமிழிலே வடித்துத் தந்த பெரும் புலவர் கம்பர். தென்மொழியை நன்றாகக் கற்றுத் 67