பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் என்று அழைக்கிறார் குமரகுருபரர் வடமொழி, தென்மொழி ஆகிய இரண்டும் தெய்வங்களுக்கு உகந்த மொழிகள் ஆகை யாலே அடியார்கள் இரண்டையும் சமமாகவே கண்டார்கள். 'வடநாட்டு மொழி ஆரியம்; அது வேண்டாம்' என வெறுத்து ஒதுக்குபவர்கள் போக்கை நினைந்து இத்தனையும் சொன்னேன். நம் நாட்டுப் பண்டம் அல்ல என்று குட்டிகூராப் பவுடர் வாங்கா மல் இருக்கிறோமா? பிளேடு வாங்காமல் இருக்கிறோமா? பல மருந்துப் புட்டிகளை வாங்காமல் இருக்கிறோமா? வெளிநாடு களிலிருந்து அவற்றையெல்லாம் வாங்கி உபயோகித்த பழக்கம் இருப்பதனாலே அவற்றை வேண்டாம் என்று ஒதுக்க நமக்கு மனசு வரவில்லை. அவை எந்த நாட்டுப் பொருள் என்றாலும் மனித சமுதாயம் அத்தனையும் அநுபவிக்கிற பொருள் ஆகை யால் நாம் எல்லோரும் வாங்குகிறோம். அப்படியே மனித சமுதாயம் உய்வதற்குரிய அரிய பல கருத்துக்கள் கொண்ட மொழி சம்ஸ்கிருதம்; அதோடு ஒரே பண்பாட்டையுடைய பாரத நாட்டு மொழி அது. ஆகையாலே தென்னாட்டவர்களும் அதை விரும்பிப் படித்தார்கள். தமிழ்நாட்டில் வேதம் பாண்டிய நாட்டைத்தான் சிறப்பாகத் தமிழ்நாடு என்பர். தமிழ் வளர்த்த சங்கத்தின் பீடமாக அமைந்திருந்தது பாண்டிய நாடு. தமிழரசியின் அரசிருக்கை மதுரை. சிவபெருமானே சங்கப் புலவர்களோடு கூடி அமர்ந்து தமிழ் ஆய்ந்த இடம் என்று மதுரையைச் சிறப்பிப்பார்கள். அந்த மதுரையிலே ஒரு சமயம் சேர சோழ பாண்டிய நாட்டுப் புலவர்கள் பலர் கூடியிருந்தார்கள். பேச்சு வாக்கிலே ஒரு புலவர், “எங்கள் நாட்டில் உள்ளவர்கள் முதற் கோழி கூவியவுடனேயே எழுந்துவிடுவார்கள் என்று சொன்னார். அவர் பாண்டி நாட்டவர் அல்ல; சோழ நாட்டவர். அதைக் கேட்ட மதுரை நகரப் புலவர், 'நீங்கள் எல்லாம் கோழி கூவித்தான் எழுந்திருப்பீர்களா? எங்கள் நாட்டிலுள்ளவர்கள் கோழி போன்ற பறவை கூவி எழுந்திருப்பது இல்லை. திருமாலி னுடைய நாபியில் உதித்த தாமரைப் பூவில் வாசம் செய்கிற பிரமன் 69