பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வேலும் சேவலும் சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும் செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ. அத்திரி என்பது மலை. சிகராத்ரி - கொடுமுடிகளோடு கூடிய மலை. இங்கே கிரெளஞ்ச மலையைக் குறிப்பிக்கிறது. போல பாட்டிலே, 'மலையாறு கூறெழ வேல் வாங்கினானை' என்று கிரெளஞ்ச மலை ஆறு கூறுகளாகப் போகும்படி வேலை விடுத்த முருகனை வணங்கி, அன்பால் நிலையான மாதவம் செய்யச் சொன்னார் அல்லவா? கிரெளஞ்ச மலை ஆறு கூறு களாகப் போகும்படி செய்தது முருகன் கரத்திலிருந்து விடுபட்ட வேல். அதை இங்கே சொல்கிறார். சிகராத்ரி கூறிட்ட வேலும் * , கொடுமுடிகளோடு கூடிய மலையாகிய கிரளெஞ்ச கிரியைக் கூறிட்ட, பொடிப் பொடியாக்கிய, வேலையும். - செஞ் சேவலும். சிவந்த இறகுகளோடு கூடிய கோழியையும். செந் தமிழால் பகர் ஆர்வம் ஈ. "செய்ய தமிழினாலே, சிறிதேனும் குற்றமில்லாத, இலக்கண்ட் பிழை இல்லாத தமிழினாலே தோத்திரம் பண்ணுகிற ஆர்வத்தை எனக்குக் கொடுப்பாயாக’ என்று சொல்கிறார். தமிழ்ப் பாட்டிலே பாடும் ஆர்வத்தைக் கொடுப்பாயாக என்று இவர் இரப்பதற்குச் காரணம் என்ன? இவருக்குத் தமிழ் நன்றாக வராது போலிருச் கிறது. எடுத்த எடுப்பிலேயே சிகராத்ரி என்று வட சொல்லாலே ஆரம்பித்திருக்கிறாரே. அந்தக் குறையை இவரே உணர்ந்து கேட் கிறார் என்று சில அதிக ஆராய்ச்சிக்காரர்களுக்குத் தோன்றும் அவர் எத்தனை அழகான தமிழ்ப் பாடல்களைப் பாடியிருக்கிறா தெரியுமா? கந்தர் அநுபூதியில், 'செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இருசொல் அறஎன் றலுமே அம்மா பொருளொன்றும்அறிந் திலனே' 72