பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் என்று வருகின்ற பாட்டிலே ஒரு வடசொல்கூட இல்லை. இப்படிப் பல பாடல்களைச் செந்தமிழில் பாடும் பெரும் புலவர் அருணகிரியார். கந்தர் அலங்காரத்திலும் இதற்குச் சான்றாகப் பல பாடல்கள் உண்டு. ஆகவே, வடசொற்கள் பாட்டிலே வருவத னால் அருணகிரியாருக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. நன்றாகத் தெரியும். வடசொல் இணைப்பு வடமொழியும் தமிழும் எம்பெருமானுக்கு உகந்த மொழி களாதலால் தமிழ்ப் பாட்டினிடையில் வடசொற்களை இணைத்துப் பாடினால் அவற்றையும் எம்பெருமான் உகந்து கேட்பான்; அது தவறு அல்ல என்ற கருத்தைக் குறிப்பாகத் தெரிவிக்கவே, இந்தப் பாட்டின் முன் இரண்டடிகளிலே, 'செந்தமிழால் பகர்கின்ற ஆர்வத்தைக் கொடுப்பாயாக’ என்று கேட்டுவிட்டு, பின் இரண்டடி கள் முழுவதையும் வட சொற்களாலே அமைக்கிறார் போலும். பணிபாச சங்க்ராம பணாமகுட நிகராட்சம பட்ச பட்சி துரங்க ந்ருப! குமரா! குக! ராட்சச பட்ச விட்சோப தீர! குணதுங்கனே! மயிலின் பெருமை பணத்தை உடையது பணி. பணம் - படம். படத்தை உடைய நாகப்பாம்புக்குப் பணி என்று பெயர். அந்தப் பாம்பு மயில் போகும்போது காலிலே கயிறு போலச் சுற்றிக் கொள்கிறது. அதோடு படத்தை எடுத்துச் சண்டை போடுகிறது. நாகப்பாம்புக் கும் கருடனுக்கும் எப்படி விரோதமோ அப்படியே மயிலுக்கும் பாம்புக்கும் விரோதம். பணியாகிய கயிற்றோடு போரிடும் தன்மை உடையது மயில். சங்க்ராமம் - போர். நாகம் படத்தை எடுத்தாலே மயிலுக்குக் கோபம் வந்துவிடும். பணாமகுட நிகரம் - படங்களையுடைய முடிகளின் தொகுதி. படங்கள் சேர்ந்த கூட்டம் உடைய தலை ஆதி சேஷனுக்கு உண்டு. நிகரம் - கூட்டம். பல தலைகளைக் கூட்டமாக உடைய ஆதிசேஷனைப் போன்ற பாம்புகளைக் கண்டால் எம்பெருமானின் வாகனமாகிய மயில் அஞ்சுவதில்லை. பல முடிகள் இருப்பத னால் பாம்பு சீறுகிறது. அந்தத் தலைக் கூட்டத்தைக் கண்டு மயில் 73