பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் ஆர்வம் விட்சோப! rோபம் என்றால் கலக்கம். விட்சோபம் என்றால் கலக்கமில்லாத தன்மை. எம்பெருமான் கலக்கம் இல்லாதவனாக இருக்கிறான். பாசமாகிய கட்டுடைய மக்கள் அஞ்ஞானத்தில் அழுந்திக் கலக்கம் உடையவர்களாகிறார்கள். பாசமாகிய கட்டை அறுத்து எறிகின்ற ஞானவேலைப் படைத்த எம்பெருமான் எப்போதும் சுத்தஞானத் தெளிவு உடையவனாக இருக்கிறான்; ஞான பண்டித சாமியாக விளங்குகிறான். ஆகவே, 'விட்சோப - கலக்கமில்லாதவனே! என்கிறார் அருணகிரிநாதர். தீர! "தைரியம் உள்ளவனே' என்கிறார். நாம் நெஞ்சிலே தீரம் இல்லா மல் பயந்து கொண்டிருக்கிறோம். பக்கத்து வீட்டுச் செல்வனுக்குப் பயப்படுவது மாத்திரம் அல்ல. நமக்கு மேலே இருக்கிற உத்தி யோகஸ்தருக்குப் பயப்படுவது மாத்திரம் அல்ல. கரிய கடாமீது வருகின்ற காலனைக் கண்டு பயந்து 'ஒ'வென அலறுகிறோம். எம்பெருமான் காலனுக்கும் காலனாக இருப்பதாலே யாரைக் கண்டும் அவன் அஞ்சுவதில்லை. அவன்தான் மகாதீரன். 'தீர தீர தீராதிதிரப் பெருமாளே என்று பாடுவார் திருப்புகழில். குணதுங்கனே! எம்பெருமான் பலவிதமான தூய அருட்குணங்கள் நிரம்பிய வன். ஆகவே தூய குணங்களுடையவனே என்கிறார். 'மயில் வாகனப் பெருமானே, குமரனே, குகனே, ராட்சசர் களைச் சங்கரிக்கின்றவனே, கலக்கமில்லாதவனே, தீரனே, தூய குணங்கள் எல்லாம் நிரம்பப்பெற்றவனே என்று வடசொல்லாலே ஆண்டவனைத் துதிக்கிறார் அருணகிரியார். வேல் சேவல் மயில் அருணகிரிநாத சுவாமிகள் தனியே முருகப்பெருமானை மாத்திரம் கும்பிட்டு நிற்பவர் அல்ல. ஞானப்பெருமானுடைய திருக்கரத்திலே படையாக விளங்குகின்ற வேலையும், வாகன மாக இருக்கிற மயிலையும், வெற்றிக் கொடியாக இருக்கிற சேவலையும் சேர்த்துத் துதிப்பது அவரது வழக்கம். சேவல் விருத்தம், மயில் விருத்தம், வேல் விருத்தம் என்று அவற்றைத் 77