பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 தனியே பாடியிருக்கிறார். வேல் வகுப்பு, ഥി வகுப்பு என்று இரண்டு வகுப்புகள் வேறு பாடியிருக்கிறார். அவர் பாடிய நூல்கள் பல. திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், வேல் மயில் சேவல் விருத்தங்கள், கந்தர் அநுபூதி என்ற ஆறு தொகுதிகளை அவர் பாடினார். இந்த ஆறு நூல்களுக்குள்ளும் இறுதியில் பாடிய நூல் கந்தர் அநுபூதி, கந்தர் அநுபூதியில் முதல் பாட்டில், ஆடுகின்ற பரியாகிய மயிலையும், படையாகிய ஞானவேலையும், வெற்றிக் கொடி யாகிய சேவலையும் பாடுகின்ற உத்தியோகத்தை ஆண்டவனே எனக்குக் கொடுப்பாயாக’ என்று விண்ணப்பித்துக் கொள்கிறார். 'ஆடும் பரிவேல் அணிசே வல்எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்!” வேலின் தத்துவம் Gഖ് வெறும் இரும்பு என்றோ மயிலும் சேவலும் வெறும் பறவைகள் என்றோ நினைப்பதற்கு உரியன அல்ல. அவை சில உண்மைகளைப் புலப்படுத்தும் அடையாளங்கள். சிகராத்ரி கூறிட்ட வேல் என்றால், கொடுமுடிகளோடு கூடிய பெரிய மலையைக் கூறு போட்டது என்று பொருள். அதைக் கண்டு இது நல்ல இரும்பினால் ஆன வேல் என்று எண்ணத் தகுமா? பெரிய மலையாக நிற்பது எது? மனிதனுடைய அகங்காரம் மலை போல் நிற்கிறது. ஆடாமல் அசையாமல் பின்னாலே இருக்கிற அத்தனை பொருள்களையும் மறைத்துக் கொண்டு நிற்கிற மலைபோல, நான் நான் என்கிற அகங்காரம் மற்றவர்களுடைய நலன்களை எல்லாம் மறைத்துக் கொண்டு நிற்கிறது. பிறர் படுகின்ற நோவைக் கண்டு மனம் இளகாதவனை, “ஏண்டா பாறைபோல் நிற்கிறாய்?" என்று சொல்வது இல்லையா? உள்ளத்திலே அசைவு இல்லாமல், இரக்க உணர்ச்சி இல்லாமல் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களுடைய உள்ளம் கொடுமுடிகளோடு வளர்ந்து நிற்கும் மலைபோன்ற அகங்காரத்தை உடையதாக இருப்பதுதான். அகங்காரமுடை யவன் பிறரிடத்திலே அன்பு இல்லாமல், கருணை இல்லாமல் 了8