பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 (முடிகளையுடைய மலையைத் துண்டுபோட்ட வேலையும், செந்நிறமுள்ள சேவற் கொடியையும், செந்தமிழால் பாடிப் புகழும் ஆர்வத்தை நீ தருவாயாக; பாம்பாகிய கயிற்றோடு போர்செய்வதும் படத்தோடு கூடிய தலைத் தொகுதியைக் கண்டு கோபம் அடைவதும், அதை அடக்குவதுமாகிய மயிலாகிய பறவையை வாகனமாக உடையவனே அரசனே குமரனே குகனே! அசுரர்களை அழிப்பவனே! கலக்கமற்றவனே தீரனே தூய குணங்களை உடையவனே! குணதுங்கனே, ஆர்வம் ஈ என்று கூட்டுக. சிகரம் - முடி. அத்ரி - மலை கூறு - துண்டு. பணி - பாம்பு. பாசம் - கயிறு. சங்க்ராமம் - போர். பணாமகுட நிகரம் - படத்தோடு கூடிய தலைத்தொகுதி. அக்ஷமம் - கோபம். பட்ச - உண்ணும் இயல்பையுடைய, இங்கே அடக்கும் என்று கொள்க. துரங்க - வாகனமாக உடையவனே. பாச சங்க்ராம பட்சி, பணாமகுட நிகராட்சம பட்சி, பட்சபட்சி என்று தனித்தனியே கூட்டுக. நீருப - அரசனே, ராட்சச பட்ச - அரக்கர்களை உண்பவனே; இங்கே அழிப்பவனே என்று பொருள்.)