பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயாதவர் படும் பாடு அவனுக்கும் உள்ள தொடர்பு, அவ்வாறு உதவி செய்ய வேண்டு மென்ற நினைவை உண்டாக்குகிறது. இதுவும் ஒரு காரணம். தனக்குத் தானே இன்பம் பெறுகிற நிலை மனிதனுக்கு இல்லை. பிறரால்தான் இன்பம் வருகிறது, உலக இயலில். தனக்கு இன்பம் தருகிறவர்கள் தன் மனைவி மக்கள் என்று நினைந்து, தான் ஈட்டிய பொருளை அவர்களுக்குக் கொடுக் கிறான். உலகத்திலுள்ள சமுதாயம் அத்தனையும் நமக்கு இன்பம் தரும் என்ற நினைவு வந்தால் எல்லோருக்குமே தான் ஈட்டிய பொருளை வழங்குவான். தன்னுடைய மனைவி மக்கள் துன்பப்படும்போது பார்த்துக் கொண்டிருக்க எவனுக்கும் மனம் வருவது இல்லை. அவர் களுடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக எண்ணுகிற இயல்பு இயற்கையாக அமைகிறது. அப்போது உள்ளம் கசிக் கிறது. அந்தக் கசிவு காரணமாக தன்னிடத்திலுள்ள பொருளைப் பற்றிக் கொள்ளாமல் அவர்களுக்குப் பயன்படுத்தும் எண்ணமும் தோன்றுகிறது. பற்றும் நெகிழ்ச்சியும் தான் ஈட்டிய பொருளைப் பற்றிக் கொள்வது பற்று. தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க மூலமாக இருப்பது அன்பு. பற்று என்பது ஒருவகையான திண்மை. அன்பு என்பது ஒருவகையான நெகிழ்ச்சி. பணத்தைக் கையில் பற்றிக் கொள் வதைவிட மனத்தினால் பற்றிக் கொள்வது மனிதனிடத்திலுள்ள மிகவும் கொடிய செயல். நெகிழ்ச்சி இன்மையினால் மனம் பொருள்களைப் பற்றிக் கொள்கிறது. அதில் நெகிழ்ச்சி உண்டாகி விட்டால் பொருள்கைளப் பிறருக்கும் பயன்படுத்தும் நிலை வரும். குழந்தையின் இயல்பு குழந்தை மிகவும் பிடிவாதம் செய்து ஒரு பொம்மையைப் பெற்றுக் கையில் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. வேறு ஒரு குழந்தைக்கு அதைக் கொடுத்துவிடு என்று சொன்னால், கொடுக் காமல் வன்மையாகப் பற்றிக் கொள்கிறது. ஆனால் அந்தக் குழந்தை தூங்கத் தொடங்கினால் எவ்வளவு இறுகப் பற்றிக் 85