பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 கொண்டிருந்தாலும் அந்தப் பொருளை நெகிழவிட்டுவிடுகிறது. அதுபோல் மனிதன் தன்னுடைய மனத்தில் நெகிழ்ச்சி இல்லா மல் கல்லைப் போன்ற வன்மையைப் பெற்றிருந்தால் நல்ல பொருள்களை எல்லாம் இறுகப் பற்றிக் கொள்ளும் தன்மை உடையவனாக இருக்கிறான். அப்படியின்றி மனம் கசிவு பெற்ற தானால் பிறருக்கும் கொடுக்க வேண்டுமென்ற நினைவு உண் டாகிறது. பெரும்பாலான மக்களுக்குத் தம்முடைய மனைவி மக்கள் என்ற ஓரளவு கசிவு இருக்கிறது. இந்தக் கசிவே விரிந் தால் அவரல்லாத பிறருக்கும் தம்முடைய பொருளைப் பயன் படுத்த வேண்டுமென்ற நினைவு ஏற்பட்டுவிடும். உள்ளக் கசிவு ஆகவே மனிதன் பொருளை ஈட்டிக் கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. ஈட்டின பொருளைப் பிறருக்கும் கொடுக்க வேண்டுமென்ற நினைவு வேண்டும். அந்த நினைவுக்குக் காரணமாக இருப்பது உள்ளக் கசிவு. மனிதனுக்கு அத்தகைய கசிவு இப்போது ஓரளவு இருக்கிறது. தன்னைச் சார்ந்தவர்களுக்கு அதைக் கொடுக்கலாம் என்ற வகையில் அந்தக் கசிவு அவன் உள்ளத்தில் நிலவுகிறது. அது பின்னும் விரிய வேண்டும்; பலருக் கும் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாக வேண்டும். அதற்கு வழி என்ன? அருணகிரியார் கூறும் வழி அருணகிரிநாத சுவாமிகள் வழி சொல்கிறார்; நெஞ்சம் கசிந்து தான் ஈட்டிய பொருளை எல்லோருக்கும் கொடுக்க வேண்டு மென்ற நிலை வருவதற்கு மிகவும் அருமையான வழியை அவர் சொல்கிறார். உலகியல் வாழ்க்கையில் பொருளை நாம் அல்லவா முயன்று ஈட்டுகிறோம் என்று நினைத்தால், கசிவு ஏற்பட நியாயம் இல்லை. உலகத்தில் எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாவருமே ஒரே வகையில் சிரமப்பட்டுப் பொருளை ஈட்டுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவர்களைக் காட்டிலும் மிக்க உழைப்பை மேற் கொள்கிற மக்கள் வறியவர்களாக இருக்கிறார்கள். கல்வி ஆற்றல் 86