பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 இல்லாமல் காய் கண்ணி வடிப்பதுபோல அந்தப் பால் வடிகிறது அந்தக் காய் முதிர்ந்து பழுக்கும்போது என்ன ஆகிறது? அப்போது அதனிடத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. பசுமை நிறம் மாறி மஞ்சள் நிறம் உண்டாகிறது. கடுமை மாறி நெகிழ்ச்சி ஏற்படு கிறது. புளிப்பு மாறி இனிப்பு உண்டாகிறது. நாம் வேண்டி னாலும் வேண்டாவிட்டாலும் மரத்திலுள்ள பிடிப்பு மாறி அது தானே உதிர்ந்துவிடுகிறது. அன்பினால் நெகிழ்ச்சி ன்பால் உள்ள பொருள்களை எல்லாம் தன்னுடையன என்று பற்றிக் கொண்டு, தன்னுடைய முயற்சியால் எல்ல. வற்றையும் சேமித்ததாக எண்ணி இறுக்கிப் பிடித்துக் கொண் டிருக்கும் மனிதனுக்கு இறைவன்பால் அன்பு உண்டானால் இத்தகைய மாற்றம் நிகழும். அவனுடைய உள்ளம் ஆருயிர் எல்லாவற்றிலும் அன்பு உடையதாகும். அதன் பயனாக உலகியற் பொருள்களிலுள்ள பற்று மெல்ல மெல்ல நழுவும். தன்னிடத் திலுள்ள பொருள்களால் எல்லோருக்கும் பயன் உண்டாக வேண்டுமென்ற விரிந்த மனோபாவம் ஏற்படும். பக்தியும் உயிர்க் கருணையும் பக்தி உடையவர்கள் இறைவனுடைய பேரருளை நினைப்பவர் களாதலின் கசிவோடு பிறருடைய துன்பத்தை நினைந்து நெகிழ் கிறார்கள். உண்மையான பக்திக்கு உயிர்க் கருணை சிறந்த அடையாளம். ஜீவ தயை இல்லாவதர்கள் இறைவனிடம் பக்தி உள்ளவர்களாக இருக்க முடியாது. விடியற் காலையில் எழுந்து நீராடித் திருநீறு அணிந்து கொண்டு, ருத்திராட்சம் தரித்து, சிவபூசையை விரிவாகச் செய்து, தேவார திருவாசகங்களை ஒதிக் கண்ணிர் விடுகிறவன், தன் வீட்டுக்கு வெளியில் வந்து நின்ற ஏழைகளைக் கோபிப்பானானால் அவன்விட்ட கண்ணிர் பொய் யென்று வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை நினைந்தே பட்டினத்தார், "அழும் கள்ளர், தொழும் கள்ளர், ஆசாரக்கள்ளர்' என்று பாடினார். உண்மையாக இறைவன் அன்பு நெஞ்சில் இருக்குமானால் அந்த நெஞ்சு உருகும்; இறைவன் அன்பினால் உருகும். உருகுவதற்கு முன் நெகிழ வேண்டும். அது முதல் நிலை. 88