பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈயாதவர் படும் பாடு நெகிழ்தலும் உருகுதலும் தன்னுடைய குற்றங்களையும், இறைவனுடைய திரு வருளைப் பெறாமல் இருக்கும் இழிந்த நிலையையும் நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ வேண்டும். பின்பு இறைவனது பெருமையையும் கருணையையும் எண்ணி உருகவேண்டும். நெகிழ்வது, உருகுவது இரண்டும் இருவேறு நிலை. 'நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக' என்று அருணகிரியார் அநுபூதியில் பாடுவார். உருகின இடத்தில் இறுகுகிற தொழில் இராது. நெய் உருகி ஓடினால் எந்தப் பொருளும் அதில் சிக்காது. உருகிய நீர் பனிக்கட்டியாகும் போது அந்த நீரிலுள்ள பொருள்கள் பனிக்கட்டிக்குள் சிக்கிவிடும். மறுபடியும் உருகும்போது சிக்கிய பொருள்கள் எல்லாம் விடுதலை பெறும். தேக அபிமானத்தால் இறுகிப் போன நெஞ்சில் உலகப் பொருள்கள் எல்லாம் சிக்கிக் கிடக்கின்றன. இறைவனுடைய திருவருட் பிரகாசத்தினால் நெஞ்சம் உருகும் போது அதில் சிக்கிக் கொண்டிருக்கிற பொருள்கள் எல்லாம் விடுபடுகின்றன. இவை என்னுடைய பொருள் என்ற மமகாரம் மாறிவிடுகிறது. பொருள்களிடத்தில் ஆசையும், அவற்றை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்ற பற்றும், பிறருக்குக் கொடுக்கக் கூடா தென்ற எண்ணமும் உண்டாவதற்கு மூல காரணம் நெஞ்சிலுள்ள இறுக்கந்தான். இறைவனுடைய தன்மையை நினையாமல் தன் னுடைய சிறுமையையும் நினையாமல் பொருளை மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்கிறவனுக்கு இத்தகைய இறுக்கம் இருக்கும். அது மாறி நெஞ்சு கசிந்தால் பொருள்களின்பாலுள்ள பற்றுத் தானே மாறிவிடும். உலகியல் அநுபவம் உலகியல் அநுபவத்தில் இத்தகைய காட்சி ஒன்றைப் பார்க்கிறோம். பல காலமாகப் பணத்தை ஈட்டிப் பிறருக்குக் கொடுக்காமல் உலோபியாக ஒருவன் இருக்கிறான். அவனுக்கு ஒருத்தியிடம் காதல் உண்டாகிறது. நிலையான காதல் அன்று. ஆனாலும் அவன் மனம் அந்தக் காதலில் முறுகி நிற்கிறது. அதைக் காதல் என்று சொல்வதைவிடக் காமம் என்று சொல்வது 89