பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தாலும் அந்த மங்கைக்கு அப்படியில்லை. இப்போதோ, 'நம் முடைய காதலனைத் தேடிப் பிடித்துவிட்டோம் என்ற உணர்ச்சி யினாலும், அவனோடு சேர்ந்திருக்கிற இன்ப அநுபவத்தாலும் இடம் பாலை என்ற நினைவே அற்றுப் போகிறது. ஆகவே மனத்தின்கண் தோற்றுகிற இன்பம் காரணமாகக் காலம் குறை கிறது; இடத்தின் தீங்கும் மறைந்து போகிறது. பிறவியும் துன்பமும் நோய் உடையானுக்குத் தென்றல் காற்றும் துன்பத்தைத் தரும்; வாடைக் காற்றும் துன்பத்தைத் தரும். அவன் எந்த இடத்தில் இருந்தாலும் துன்பத்தை உணர்கிறான். அதுபோலவே பிறவி என்னும் பெரிய நோய் அடைந்தவனுக்கு எல்லா இடங் களும் துன்பத்தைத் தருவனவாக அமைகின்றன. இன்பம் தருவ தாகச் சிலகணம் தோற்றினாலும் பின்பு துன்பமாக முடிகிறது. உலகில் வாழ்கிற மக்கள் எல்லாம் பொருளினால் இன்பம் பெறுவதாக நினைக்கிறார்கள். ஆனால் பலகாலம் அந்த இன்பம் அவர்களுக்கு நிலைப்பது இல்லை. அதுபோலவே உடம்பின் ஆற்றலாலும், இளமையினாலும், மக்களுடைய உறவினாலும், பலவகைப் பண்டங்களின் உதவியினாலும் இன்பம் அடைவதாக முதலில் ஒரு தோற்றம் உண்டாகிறது; பின்பு அவற்றால் துன்பமே உண்டாவதை உணர்கிறான். பொதுவாக உலகத்தில் பிறந்தவர்கள் எல்லோருமே துன்பத்தையே அடைகிறார்கள். ஒருகால் வாழ்நாள் முழுவதும் குறைவு இல்லாத இன்பத்தை அடைந்தாலும் இறுதியில் மரணம் என்ற துன்பத்தை நிச்சயமாக அடைகிறார்கள். இப்படி வருகிற இன்ப துன்பங்கள் எல்லாம் மனத்தில் உண்டாகின்ற உணர்ச்சிகள். மனம் எதைச் சார்ந்திருக்கிறதோ அதன் வண்ணமாக நின்று அநுபவத்தைப் பெறுகிறது. எந்தப் பொருள் இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்டதோ அந்தப் பொருளை மனம் சார்ந்தால் இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்ட நிலையான அநுபவம் ஒரளவு அதற்கும் கிடைக்கும். காலதேச பரிச்சின்னத்திற்கு அப்பால் இருக்கிற இறைவன் நிரதிசய ஆனந்தமாகிய முத்தியைத் தருபவன். அவனை மனம் அடைய முடியாது. ஆனாலும் அவனுடைய திருவருளை நினைந்து அவன் 90