பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 வுடன் தூக்கம் வந்துவிடுகிறது. அடித்துப் போட்டாற்போல உடலைக் கீழே சாய்த்துப் படுத்தவுடனே உறங்கிவிடுகிறார்கள். இடறினால்கூட அவர்களுக்குத் தெரிவது இல்லை. அப்படி உலகத்திலே உண்டான துன்பங்களினால் அலுத்துப் போய், இறைவன் திருவருளைப் பெறவேண்டுமென்ற தாகம் மிகுந்து, அவனுடைய திருவடி மலரிலே உள்ளம் என்னும் வண்டைத் தூங்கவிட்டு நிற்பார்களானால் அத்தகைய அன்பர்களுக்குக் காலம் போவது தெரியாது; இடம் மறைவது தெரியாது. . மனம் உறங்குதல் மனத்தை ஒருமுகப்படுத்துவதைத் தியானம் என்று சொல் வார்கள். நாமாக முயன்று செய்வது தியானம். அதன் முடிவிலே அது தனியாக ஒரிடத்தில் நிற்பது லயம். மனம் இறைவனுடைய திருவடியில் லயப்பட்டால் அது தூங்கத் தொடங்கும். அது சுத்த அவஸ்தையில் சுஷாப்தி என்று சொல்லப்படும். அதையே சவிகற்ப சமாதி என்று சொல்வார்கள். தூங்குகிறவர்களில் சிலர் கொஞ்சம் கைதட்டினால் எழுந்துவிடுவார்கள். அதுபோலச் சவிகற்ப சமாதியில் சற்றுத் தடை நேர்ந்தால் உடனே விழிப்புக் கொடுத்துவிடும். அப்படியின்றிக் காடாந்தகாரத் தூக்கம் போடுவது போல எந்த இடையூறும் தாக்காமல் தூங்குவது நிர்விகற்ப சமாதி. அந்தச் சமாதியில் ஈடுபடுகிறவனுக்குப் புற உலகமே தோன்றாது. புற உலக நிகழ்ச்சிகளுக்கும் அவனுக்கும் தொடர்பு இல்லை. ஒருவன் ஓரிடத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது அந்தப் பக்கத்தில் ஒரு பாம்பு ஓடி வந்து திரும்பிப் போய் விடுகிறது. ஒரு புலி அந்தப் பக்கமாகச் செல்கிறது. திருடன் ஒருவன் ஒடுகிறான். அவன் இருக்கும் இடத்தில் தீப்பிடிக்கிறது. துங்கும்போது இவற்றில் ஒன்றையும் அவன் தெரிந்து கொள் வதில்லை. ஆனால் தூங்காமல் இருந்திருந்தால் அவற்றைக் கண்டவுடன் ஒலமிட்டிருப்பான். பிரபஞ்ச வாசனையோடு உலகில் வாழ்கிற மனிதனுக்கு இன்ப துன்பம் வருவதற்கு முன்னாலே அதைப் பற்றிய நினைவு மாத்திரத்தில் பயம் உண்டாகும். புலி அடிப்பதைவிடக் கிலி அடிப்பது பெரியது என்பார்கள். பிரபஞ்சச் சேற்றைக் கழுவி, இறைவனுடைய திருத்தாளில் ஈடுபட்ட நெஞ்சுடையவர்களுக்கோ மனோலயம் 92