பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லை கடந்த இன்பம் ஏற்பட்டுக் கால தேச பரிச்சின்னத்திற்கு அப்பாற் பட்ட அநுபவத்தைப் பெறும் வழி கைகூடும். இதனை அருணகிரியார் இந்தப் பாட்டில் சொல்கிறார். யுகமும் சகமும் முருகப்பெருமானுடைய சரணாரவிந்தங்களில் தம்முடைய கருத்தை இருத்துகின்ற ஆற்றல் பெற்றவர்களுக்கு யுகம் போகும்; ஜகம் போகும் என்கிறார். - முருகன் சரணத்திலே ஓடும் கருத்தை இருத்த வல்லார்க்கு உகம் போய்ச் சகம்போய். மனம் எப்பொழுதும் சலனம் உடையது. அதனை வாயுவின் அம்சம் என்று சொல்வார்கள். ஒரு கணம்கூட நிற்காமல் எப் போதும் அலைபடும் கடலைப் போலச் சஞ்சலித்துக் கொண் டிருக்கும் இயல்புடையது. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றித் தாவுகின்ற தன்மை வாய்ந்தது. அதனால் அதை ஒடும் கருத்து' என்று சொன்னார். உலகம் எல்லாம் பறந்தோடுகின்ற அத னுடைய தன்மையை மாற்றி, இறைவனுடைய நினைவாகிய வட்டத்தினுள் ஒடச் செய்து, பின்பு அவன் திருவடியில் படிந்து நிற்கச் செய்ய வேண்டும். - தனிவேல் முருகன் முருகப் பெருமானைப் பற்றிச் சொல்லுகையில் அவன் போர்க்களத்தில் அமைதியை உண்டாக்கின வேலாயுதத்தை உடையவன் என்று தெரிவிக்கிறார். தேவர்களும், அசுரர்களும் எதிர்த்துச் சாடுகின்ற போர்க்களத்தில் வேறு யாராலும் செய்ய முடியாத பெரிய வீரச் செயல்களைச் செய்யும் ஒப்பற்ற வேலா யுதத்தைக் கையில் படைத்தவன் முருகன். சாடும் சமரத் தனிவேல் முருகன். சமரம் என்பது சண்டை. இரண்டு கட்சியில் உள்ளவர்களும் ஒருவரோடு ஒருவர் மோதி, ஆரவாரம் செய்து கருவிகளை எல்லாம் வீசி எறிந்து, உடம்பையும் உள்ளத்தையும் குலைத்துக் கொள்வது சமரம். ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் தினந் 93