பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 தோறும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. தீய குணங்களுக்கும், நல்ல குணங்களுக்கும் போராட்டம் ஒய்வு ஒழிவின்றி நிகழ்கிறது. 'ஓயாதோ என்கவலை? உள்ளேயா னந்தவெள்ளம் பாயாதோ? ஐயா பகராய் பராபரமே" என்கிறார் தாயுமானவர். இப்படி ஓயாத கவலையும், ஒழியாத போராட்டமுமாக நம்முடைய உள்ளம் இருக்கிறது. இதுவே குருக்ஷேத்திரம். இதுவே போர்க்களம். இந்த உள்ளத்தில் அமைதி உண்டாகவேண்டுமானால், இந்த அலைச்சலைப் போக்குவதற்குத் தனிப்பெரும் கருவி ஒன்று வேண்டும். அமரரை நம்பினால் பயன் இல்லை. அசுரர்களை நம்பினாலும் பயன் இல்லை. அமரரை நம்பினால் அகங்காரம் எழும்; அசுரர்களை நம்பினால் அஞ்ஞானம் எழும். அமரர்களுடைய தயவு உண்டானால் சொர்க்கம் சித்திக்கும். அசுரர்களுடைய அன்பு உண்டானால் நரகம் சித்திக்கும். புண்ணியத்தின் பயனாகிய சொர்க்கமும், பாவத்தின் பயனாகிய நரகமும் இரண்டும் அற்ற நிலையிலே உண்டாகும் வீடு ஆகாது. ஆகவே, போராட்டம் நின்று அமைதியாகிய சாந்தம் நிலவ வேண்டுமானால் வேலாயுதம் நமக்குத் துணையாக நிற்க வேண்டும். வேலாயுதம் ஞானத்தின் சொரூபம். அதனை நமக்கு வழங்குபவன் என்றும் இளைய பிரானாகிய முருகன். பிரபஞ்ச வாசனையிலே ஈடுபட்டுக் காமம் குரோதம் முதலிய ஆறுவகைப் பகைவர்களுக்குட்பட்டுத் தினந்தோறும் பெரிய சண்டையில் ஈடுபட்டிருக்கிற மனத்தில் அமைதி வரவேண்டுமானால், ஞான சக்தியை வேலாயுதமாக வைத்திருக்கிற முருகப் பெருமானுடைய பாதாரவிந்தத்தில் அந்த மனம் ஈடுபட வேண்டும். எங்கும் ஒடா மல் அங்கே அது இருக்க வேண்டும். அவனுடைய வேலையும், அவனுடைய முகத்தையும், தோளையும், திருவுருவப் பேரெழி லையும் சுற்றிச் சுற்றி வந்து நடமிட்டுப் பின்பு எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கிற திருவடி மலரிலே விழுந்து கிடக்க வேண்டும். அப்போதுதான் அதனுடைய ஒட்டம் நிற்கும். சாடும் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே ஒடும் கருத்தை இருத்த வல்லார்க்கு உகம்போய்ச் சகம் போய் யுகம் என்றால் கால எல்லைக்குத் தலையெல்லை. சகம் என்பது நமக்குத் தெரிந்த இட எல்லையின் முடிவு. பிரபஞ்ச $4