பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 பாடும் கவுரி பவுரிகொண்டு ஆடப் பசுபதி நின்று ஆடும் பொழுது. துரிய நிலை இது உலகப் பிரளயம். அதுபோலவே ஒரு மனிதன் நல்ல சாதன முறையில் சென்று மனத்தை ஒருமைப்படுத்தித் தியானத் தில் ஈடுபட்டு ஆன்ம இன்பம் அடையும் பக்குவம் அடைந்தால் இறைவன் இறைவியினது கூத்தும் பாட்டும் அவனுக்குப் புலனாகும். அவனளவில் பிரபஞ்சம் ஒடுங்கித் தத்துவங்கள் ஒடுங்கிவிடுகின்றன. பிரளயமே வந்துவிடுகிறது. அதுதான் கருவி கரணங்களுக்கு அதீதமான நிலை; அவஸ்தைகளுக்கு அதீதமான நிலை. யோகியர்கள் இந்த நிலையை அநுபவிப்பார்கள். அதீத நிலை - உயிர் துரியாவஸ்தையில் நிற்கும்போது இறைவனுடைய ஆட்டத்தையும், இறைவியினுடைய தாளத்தையும், பாட்டையும் காணலாம். அதற்கு முன்பு மனம் தூங்குகிற சுழுத்தியைக் கடக்க வேண்டும். பின்பு துரிய நிலையையும் கடந்து, துரியாதீத நிலையை அடையும்போது பேரின்ப அநுபவத்தில் திளைக்கும் அநுபவம் கைகூடும். பரமாய் இருக்கும் அதீதத்திலே. மூச்சை நிறுத்தி, மூலாதாரத்து அக்கினியை எழுப்பி, பிரம் மரந்தரம் அளவும் செலுத்தி, இடையில் வருகிற இடையூறுகளை எல்லாம் மாற்றிச் சமாதி நிலை எய்தினால் இந்த இன்பம் கைகூடும் என்ற யோகிகள் கூறுவார்கள். ஆனால் முருகனுடைய பாதாரவிந்தத்தில் உள்ளத்தை வைத்துவிட்டால் மிகவும் முயன்று யோகம் செய்ய வேண்டியதில்லை. யோகிகள் பெறும் சிறந்த நிலையையே அடைந்துவிடலாம் என்று ஒர் எளிய வழியை அருணகிரியார் இந்தப் பாடலில் காட்டுகிறார். சாடும் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே ஓடும் கருத்தை இருத்தவல் லார்க்குஉகம் போய்ச்சகம்போய்ப் 9S